
தில்லியில் இருந்து லண்டன் புறப்பட தயாரான ஏர் இந்தியா விமானத்தின் பயணம், தொழில்நுட்பக் கோளாறினால் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தில்லியில் இருந்து லண்டன் நகரத்துக்குச் செல்ல, ஏர் இந்தியா விமானம், இன்று (ஜூலை 31) புறப்படத் தயாரானது. அப்போது, விமானிகள் மேற்கொண்ட வழக்கமான சோதனைகளின் மூலம், விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டிருக்கக் கூடும் எனும் சந்தேகத்தில் இந்தப் பயணத்தை அவர்கள் ரத்து செய்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அந்த விமானத்தில் இருந்து, பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். இந்தப் பயணத்தில் பறக்கத் தயாரானது, போயிங் 787-9 விமானம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையடுத்து, வெளியேற்றப்பட்ட பயணிகள் அனைவருக்கும் மற்றொரு விமானம் மூலம் லண்டன் செல்வதற்கான நடவடிக்கைகள் ஏர் இந்தியா நிறுவனத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், பயணிகளின் எண்ணிக்கைகள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
முன்னதாக, ஜூன் 12 ஆம் தேதி அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கி புறப்பட்ட விமானம், சில நிமிடங்களில் கீழே விழுந்து வெடித்துச் சிதறியதில் 260 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: பிலிப்பின்ஸ் அதிபர் ஆக.4-ல் இந்தியா வருகை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.