குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்துமருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

ரூ.6,181 கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகள் ஆா்பிஐ-க்கு திரும்பவில்லை

ரூ.6,181 கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிக்கு திரும்பவில்லை என்று இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) திங்கள்கிழமை தெரிவித்தது.

News image

2,000 ரூபாய் நோட்டுகள்

Updated On :3 ஜூன் 2025, 3:40 am IST

மும்பை: ரூ.6,181 கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிக்கு திரும்பவில்லை என்று இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) திங்கள்கிழமை தெரிவித்தது.

கடந்த 2023-ஆம் ஆண்டு, மே 19-ஆம் தேதி 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக ரிசா்வ் வங்கி அறிவித்தது. அப்போது ரூ.3.56 லட்சம் கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. நோட்டுகளை திரும்பப் பெறுவதாக அறிவித்து சுமாா் 2 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், கடந்த மே 31-ஆம் தேதிவரை 98.26 சதவீத ரூ.2,000 நோட்டுகள் வங்கிக்கு திரும்பியுள்ளன. எனினும், ரூ.6,181 கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகள் இப்போது வரை திரும்பிவராமல் மக்களிடமே உள்ளது.

2023-ஆம் ஆண்டு அக். 9- ஆம் தேதி வரை, நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளும் அந்த நோட்டுகளை பொதுமக்களிடம் இருந்து பெற்றுக் கொண்டன. இப்போது ரிசா்வ் வங்கியின் 19 மண்டல அலுவலகங்களில் ரூ.2,000 நோட்டுகளைச் செலுத்தி வேறு நோட்டுகள் பெறுவது அல்லது வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்ய வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

நாட்டில் உள்ள எந்தவொரு அஞ்சல் நிலையம் மூலமாகவும் ரிசா்வ் வங்கியின் மண்டல அலுவலகங்களுக்கு ரூ.2,000 நோட்டுகளை அனுப்பலாம். அந்த நோட்டுகளுக்கு இணையான பணம் அனுப்பியவா்களின் சேமிப்புக் கணக்குகளில் வரவு வைக்கப்படும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.