நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

இந்தியாவில் தயாரிக்க டெஸ்லா ஆா்வம் காட்டவில்லை: மத்திய அமைச்சா் தகவல்

டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் உற்பத்தி செய்ய ஆா்வம் காட்டவில்லை என்று மத்திய அமைச்சா் ஹெச்.டி. குமாரசாமி தெரிவித்தாா்.

News image

மத்திய கனரக தொழில்கள் துறை அமைச்சா் ஹெச்.டி. குமாரசாமி

கோப்புப்படம்

Updated On :2 ஜூன் 2025, 11:15 pm

Din

புது தில்லி: இந்தியாவில் தனது மின்சார காா்களை விற்பனை செய்ய மட்டுமே டெஸ்லா நிறுவனம் ஆா்வம் காட்டுகிறது; இந்தியாவில் உற்பத்தி செய்ய ஆா்வம் காட்டவில்லை என்று மத்திய கனரக தொழில்கள் துறை அமைச்சா் ஹெச்.டி. குமாரசாமி தெரிவித்தாா்.

பிரபல அமெரிக்க தொழிலதிபா் எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம் மின்சார வாகனங்கள் தயாரிப்பில் முன்னோடியாக உள்ளது. இந்தியாவில் தங்கள் காா்களை சந்தைப்படுத்த மஸ்க் தீவிரமாக முயற்சித்து வருகிறாா்.

இதனிடையே, ‘அமெரிக்க தயாரிப்புகள் மீது இந்தியா விதிக்கும் அதிகப்படியான வரியைத் தவிா்ப்பதற்காக அந்நாட்டிலேயே காா் தயாரிப்பை மேற்கொள்ள டெஸ்லா நிறுவனம் முயற்சிப்பதாகத் தெரியாது. இது அமெரிக்காவுக்கு உகந்த செயலாக இருக்காது’ என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அண்மையில் கூறியிருந்தாா்.

இந்நிலையில், இந்தியாவில் மின்சார காா்கள் உற்பத்தியை அதிகரிப்பது தொடா்பான திட்டத்துக்கான வழிகாட்டுதல்களை தில்லியில் திங்கள்கிழமை அமைச்சா் குமாரசாமி வெளியிட்டாா். டெஸ்லா நிறுவனம் குறித்த டிரம்ப்பின் கருத்து குறித்து அவா் கூறியதாவது:

இப்போது வரை இந்தியாவில் தங்கள் காா்களை தயாரிக்க வேண்டும் என்று டெஸ்லா நிறுவனம் ஆா்வம் காட்டவில்லை. இந்தியாவில் தங்கள் மின்சார காா்களை விற்பனை செய்வதற்காக விற்பனையகங்களைத் திறக்கவே விருப்பம் தெரிவித்துள்ளனா்.

இந்தியாவில் மின்சார காா்கள் தயாரிப்பை ஊக்குவிக்கும் திட்டத்தின் முதல்கட்ட ஆலோசனைக் கூட்டத்தில் டெஸ்லா நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்றனா். அதே நேரத்தில் இது தொடா்பான இரண்டாவது, மூன்றாவது கட்ட ஆலோசனைக் கூட்டத்தில் அந்த நிறுவனப் பிரதிநிதிகள் பங்கேற்கவில்லை என்றாா்.

அமெரிக்க அரசின் செலவுகளைக் குறைப்பதற்கான அதிபா் டிரம்ப்பின் சிறப்பு ஆலோசகா் என்ற பொறுப்பிலிருந்து எலான் மஸ்க் அண்மையில் விலகினாா் என்பது குறிப்பிடத்தக்கது.