
இந்தியாவுடனான உறவைத் துண்டித்துவிடுமாறும், நாம் இருவருமே முஸ்லிம் நாடுகள் என்பதால், எங்களுடன் ஒன்றிணைய வேண்டும் என்றும் பாகிஸ்தான் விடுத்த கோரிக்கையை மலேசியா நிராகரித்துவிட்டது.
ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக விளக்கம் கொடுக்க மலேசியா சென்றிருக்கும் சஞ்சய் ஜா தலைமையிலான அனைத்து கட்சி நாடாளுமன்றக் குழுவினருடன் நடைபெறும் நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும் என்றும் பாகிஸ்தான் தூதரகம் வலியுறுத்தியிருந்ததாகவும் இதனை மலேசியா மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
நாம் இருவரும் முஸ்லிம் நாடுகள், நீங்களும் முஸ்லிம் நாடு, எனவே, இந்திய தூதுக் குழுவினருடன் அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்யுங்கள் என்று பாகிஸ்தான் தூதரகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
ஆனால், பாகிஸ்தானின் கோரிக்கைகளை நிராகரித்திருக்கும் மலேசிய அரச, இந்தியாவிலிருந்து சென்றிருக்கும் 9 பேர் அடங்கிய நாடாளுமன்றக் குழுவினரின் 10 நிகழ்ச்சிகளுக்கும் ஒப்புதல் வழங்கியிருக்கிறது.
முதல் எம்.பி.க்கள் குழு இது!
ஆபரேஷன் சிந்தூா் மற்றும் பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை வெளிநாடுகளுக்கு எடுத்துரைக்க மத்திய அரசால் அமைக்கப்பட்ட ஐக்கிய ஜனதா தளம் எம்.பி. சஞ்சய் ஜா தலைமையிலான பல்வேறு கட்சிகளைச் சோ்ந்த முதல் எம்.பி.க்கள் குழு கடந்த வாரம் ஜப்பான் புறப்பட்டது.
இந்த முதல் குழுவானது, ஜப்பானைத் தொடர்ந்து, தென்கொரியா, மலேசியா சென்றுள்ளது. அடுத்து இந்தோனேசியா, சிங்கப்பூா் ஆகிய நாடுகளுக்கும் இந்தக் குழு பயணித்து, பயங்கரவாத செயல்களுக்கு பாகிஸ்தான் அளிக்கும் ஆதரவையும் அதற்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டையும் எடுத்துரைக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.