சிக்கிம் மாநிலத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட சட்டென் பகுதியில் சிக்கியிருந்த 63 பேர் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டுள்ளனர்.
சிக்கிமின் மங்கன் மாவட்டத்தில், சட்டென் பகுதியில், கடந்த ஜூன் 1 ஆம் தேதி இரவு 7 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. அங்கு நிலவும் மோசமான வானிலைக்கு இடையில் இந்திய விமானப் படை, தேசிய பேரிடர் மீட்புப் படை ஆகிய படைகள் தற்போது மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், சட்டென் பகுதியில் சிக்கியிருந்த 63 பேர் இந்திய விமானப் படையின் ஹெலிகாப்டர்கள் மூலம் இன்று (ஜூன் 5) மீட்கப்பட்டுள்ளனர். இதில், எம்.ஐ. 17 ஹெலிகாப்டர்கள் மூலம் 39 பேர் மீட்கப்பட்டு பாக்யோங் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டனர்.
மேலும், 4 பேர் சீட்டா ரக ஹெலிகாப்டர் மூலமாகவும், 20 பேர் மேற்கு வங்கத்திலிருந்து வந்த மற்றொரு எம்.ஐ.17 ஹெலிகாப்டர் மூலமாகவும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இதில், பெரும்பாலானோர் சுற்றுலாப் பயணிகள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, சிக்கிமில் நிலவும் மோசமான வானிலையால், மீட்புப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் சட்டென் பகுதியிலிருந்து மீட்கப்பட இன்னும் 64 சுற்றுலாப் பயணிகள் காத்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, சட்டெனில் ஏற்பட்ட நிலச்சரிவில் அங்கு அமைக்கப்பட்டிருந்த ராணுவ முகாம் முழுவதுமாக மண்ணுக்குள் புதைந்தது. இதில், 3 ராணுவ வீரர்கள் பலியானதுடன், 6 பேர் மாயமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சீனாவில் நிலச்சரிவில் சிக்கி 8 போ் பலி, 34 போ் மாயம்: தேடுதல் பணியில் மீட்புக் குழுவினர்!
வயநாடு நிலச்சரிவு: இழப்பீடு வழங்க சுரங்க நிறுவனத்துக்கு உத்தரவு

வயநாடு நிலச்சரிவு! பலி எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு!

வயநாடு நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



