சட்டவிரோதமாக வசித்த 71 வெளிநாட்டவர் நாடு கடத்தல்!

தில்லியில் சட்டவிரோதமாக வசித்த 71 வெளிநாட்டவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

தில்லியில் சட்டவிரோதமாக குடியேறி வசித்து வந்த 71 வெளிநாட்டவர்கள், தங்களது தாயகங்களுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

தில்லியின் உத்தம் நகர் மற்றும் சாவ்லா ஆகிய பகுதிகளின் காவல் துறையினர் இணைந்து; அம்மாநிலத்தில் உரிய ஆவணங்களின்றி சட்டவிரோதமாக குடியேறியவர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து, துவாராகா மாவட்டத்தில், சட்டவிரோதமாக தங்கியிருந்த 71 வெளிநாட்டவர்களை, அம்மாநில காவல் துறையினர் கடந்த மே மாதம் கைது செய்தனர்.

இதில், 41-வங்கதேசத்தினர், 17-மியான்மரின் ரோஹிங்கியா மக்கள், 7 - நைஜீரியா நாட்டினர் கைதானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர், அவர்கள் அனைவரின் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், தற்போது அவர்கள் தங்களது தாயகங்களுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதையும் படிக்க: அயோத்தி ராமர் கோயில் பிரசாதம்! கோடிக்கணக்கில் மோசடி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com