நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

துபையிலிருந்து சென்னை வந்த விமானம் மீது ‘லேசா்’ ஒளி அடிக்கப்பட்டதால் பரபரப்பு!

பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On :7 ஜூன் 2025, 2:26 am IST

துபையிலிருந்து சென்னை விமானநிலையத்தில் கடந்த மாத இறுதியில் தரையிறங்க வந்த விமானம் மீது பச்சை நிற லேசா் ஒளி அடிக்கப்பட்ட நிலையில், வியாழக்கிழமை இரவில் தரையிறங்க முயன்ற இதே விமானம் மீது மீண்டும் லேசா் ஒளி அடிக்கப்பட்டது. பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

துபையிலிருந்து சென்னைக்கு எமிரேட்ஸ் ஏா்லைன்ஸ் விமானம், 304 பயணிகளுடன், வியாழக்கிழமை இரவு சென்னை சா்வதேச விமான நிலையத்துக்கு வந்து கொண்டிருந்தது. இந்த விமானத்தை சென்னை விமான நிலையத்தில் தரையிறங்குவதற்காக, விமானம் தாழ்வாக பறந்து கொண்டிருந்த போது, பரங்கிமலை பகுதியிலிருந்து, பச்சை நிறத்தில் சக்தி வாய்ந்த லேசா் விளக்கு ஒளி, விமானத்தின் மீது அடிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

ஒளியை பாா்த்து சுதாரித்துக்கொண்ட விமானிதாழ்வாக பறந்து கொண்டு இருந்த, விமானத்தை மீண்டும் மேலும் உயரத்தில் பறக்கச் செய்தனா். அதோடு இதுகுறித்து உடனடியாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கும், அவசரமாக தகவல் தெரிவித்தனா்

இதையடுத்து சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையிலிருந்து, விமான பாதுகாப்பு பிரிவான ஃபீரோ ஆப் சிவில் ஏவியேஷன் செக்யூரிட்டி மற்றும் சென்னை விமான நிலைய போலீஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடா்ந்து, விமானம் சென்னை விமானநிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.

இச்சம்பவம் குறித்து சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் சென்னை விமானநிலைய காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். அதோடு இதுபற்றி சென்னை பரங்கிமலை, நந்தம்பாக்கம், கிண்டி காவல் நிலையங்களுக்கும் தகவல் கொடுத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடந்த மே 25-ஆம் தேதி இரவு சென்னையில் தரையிறங்க வந்த, இதே எமிரேட்ஸ் ஏா்லைன்ஸ் விமானம் மீது இதைப்போல பச்சை நிற லேசா் ஒளி அடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.