பொய்க் கூறி மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது! ராகுலுக்கு அமித் ஷா அறிவுரை!இரு மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை: ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஉச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்திமின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டுசென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

கரோனா பரவல்: ஒடிசாவில் புதியதாக 7 பேருக்கு பாதிப்பு!

ஒடிசாவில் புதியதாக 7 பேருக்கு கரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

கோப்புப் படம்

Published On :

ஒடிசா மாநிலத்தில் புதியதாக 7 பேருக்கு கரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவில் கரோனா பரவல் வேகமெடுத்துள்ள நிலையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,000-ஐ கடந்துள்ளது. இந்நிலையில், ஒடிசா மாநிலத்தில் புதியதாக 7 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம், அம்மாநிலத்தில் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது. மேலும், தற்போது 23 பேர் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் 7 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, அம்மாநில சுகாதாரத் துறை இயக்குநர் நீலகண்ட மிஷ்ரா கூறுகையில், நாள்தோறும் ஒடிசாவில் சராசரியா 5 முதல் 7 கரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், வரும் ஜூன் 20 ஆம் தேதி கோடைக்காலம் முடிவடைந்து ஒடிசாவில் கல்வி நிறுவனங்கள் மீண்டும் திறக்கப்படவுள்ள நிலையில், பள்ளிக்கூடங்களில் கரோனா பரவலுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என நேற்று (ஜூன் 5) அம்மாநில அரசு அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.