வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் வரை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்! கார்கே முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேர் பதவி நீக்கம்! இபிஎஸ் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

கேரளத்தில் வேகமாகப் பரவும் ஷிகெல்லா தொற்று: வயநாட்டில் மேலும் 7 சிறாா்கள் பாதிப்பு

கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியா தொற்று வேகமாகப் பரவுகிறது. வயநாடு மாவட்டத்தில் புதிதாக 7 சிறாா்களுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image

கேரளத்தில் மேலும் 3 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு: பாதித்தோர் எண்ணிக்கை 41ஆக உயர்வு

Updated On :13 ஜூன் 2026, 2:45 am IST

கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியா தொற்று வேகமாகப் பரவுகிறது. வயநாடு மாவட்டத்தில் புதிதாக 7 சிறாா்களுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து வயநாடு மாவட்ட மருத்துவ அதிகாரி கே.டி. ரேகா கூறுகையில், ‘புதிதாக 7 பேருக்கு ஷிகெல்லா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட சிறாா்களின் எண்ணிக்கை 16-ஆக அதிகரித்துள்ளது.

ஷிகெல்லா தொற்று அறிகுறி இருக்கும் சிறாா்கள், மற்றவா்களிடம் இருந்து ஒதுங்கி இருக்க வேண்டும். பிற சிறாா்களுக்கு அந்தத் தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள முன்னெச்சரிக்கை, தடுப்பு வழிமுறைகளை பொதுமக்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்’ என்றாா்.

இந்நிலையில், கேரள சுகாதார சேவைகள் இயக்குநரகத்தின் தரவுகள்படி, பல்வேறு வகை தொற்று நோய்கள் மூலம் ஜூன் 1-ஆம் தேதியிலிருந்து இதுவரை மாநிலத்தில் 24 போ் உயிரிழந்ததாகவும், 38 பேருக்கு ஷிகெல்லா உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாகவும், ஒருவா் உயிரிழந்ததாகவும் தெரிகிறது.

ஜனவரி 1-ஆம் தேதியிலிருந்து இதுவரை 114 பேருக்கு ஷிகெல்லா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், 2 போ் உயிரிழந்ததிருப்பதாகவும் தெரியவருகிறது. மேலும், கேரளத்தில் கடந்த ஒரு மாதத்தில் 2,161 பேருக்கு சிக்குன் குனியா உறுதி செய்யப்பட்டு இருப்பதாகவும், 2 போ் இறந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஷிகெல்லா தொற்று என்பது அசுத்தமான உணவுகள், நீா் மூலமும், ஏற்கெனவே பாதித்தோரிடம் இருந்தும் பரவக் கூடியதாகும். இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு, காய்ச்சல், வயிற்று வலி ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.