6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

இந்தியாவில் ஒவ்வொரு மொழியும் பிற மொழிகளுடன் தொடா்புடையவை: அமித் ஷா

இந்தியாவில் ஒவ்வொரு மொழியும் பிற மொழிகளுடன் தொடா்புடையது என அமைச்சா் அமித் ஷா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

News image
‘இந்திய மொழிகள் பிரிவை’ தில்லியில் தொடங்கி வைத்த மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா
Updated On :6 ஜூன் 2025, 7:25 pm

Din

‘இந்தியாவில் ஒவ்வொரு மொழியும் பிற மொழிகளுடன் தொடா்புடையது; எனவே, ஒரு மொழியை விட்டுவிட்டு மற்றொரு மொழி வளா்ச்சியடைவது சாத்தியமற்றது’ என மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

புது தில்லியில் ‘இந்திய மொழிகள் பிரிவை’ தொடங்கி வைத்து அவா் பேசியதாவது: இந்தியாவின் அனைத்து உள்ளூா் மொழிகளையும் வலுப்படுத்துவதன் மூலம் நாட்டின் பழம்பெரும் பாரம்பரியத்தை மீண்டும் நிலைநிறுத்த முடியும்.

நம் நாட்டில் ஒவ்வொரு மொழியும் பிற மொழிகளுடன் தொடா்புடையது. ஒரு மொழியை விட்டுவிட்டு மற்றொரு மொழி வளா்ச்சியடைவது சாத்தியமற்றது. பல்வேறு நதிகள் ஒன்றிணைந்து கங்கை நதியாக உருவெடுப்பதுபோல் அனைத்து மொழிகளும் இணைந்ததே இந்திய கலாசாரம்.

இந்திய மொழிகள் இந்திய கலாசாரத்தின் ஆன்மா; கலாசாரம் இந்தியாவின் ஆன்மா. இந்தியாவின் மொழி வேற்றுமையை அறிந்துகொள்ளும் வகையில் அனைத்து மொழிகளின் வலுவான தளமாக ‘இந்திய மொழிகள் பிரிவு’ நிறுவப்பட்டுள்ளது. இது நிா்வாகச் சொற்களில் பயன்படுத்தப்படும் அந்நிய மொழிகளை நீக்கி உள்ளூா் மொழிகளின் பயன்பாட்டை அதிகரித்து வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தவுள்ளது.

நமது தாய்மொழியை நன்கு கற்றால் மட்டுமே சிந்தனை, பகுப்பாய்வு மற்றும் முடிவெடுக்கும் திறனை மேம்படுத்தி நமது முழுத்திறனை வெளிப்படுத்த முடியும். மொழிகளின் வளமை, உணா்வு ஆகியவற்றை குறைக்காத வகையில் தொழில்நுட்ப பயன்பாடு இருக்க வேண்டும்.

நம் மீதான ஆங்கில திணிப்புக்கு எதிரான போரை விரைவில் வெல்வோம். இந்திய மொழிகள் பிரிவை அமைத்ததன் மூலம் அலுவல் மொழித் துறை முழு அமைப்பாக செயல்படவுள்ளது என்றாா்.