உடல்களை அடையாளம் காணும் பணி தீவிரம் !

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து பற்றி...
விமான விபத்து
விமான விபத்து PTI

241 பேர் பலி 

ஆமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த 241 பேர் பலியானதாக ஏர் இந்தியா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

விமானத்தில் பயணித்த ஒருவர் மட்டும் மருத்துவமனையில் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஆமதாபாத்தில் மோடி 

தில்லியில் இருந்து ஆமதாபாத் விமான நிலையத்துக்கு வருகைதந்த பிரதமர் நரேந்திர மோடி, விபத்து ஏற்பட்ட பகுதியில் நடைபெறும் மீட்புப் பணிகளை பார்வையிட்டார்.

தொடர்ந்து, ஆமதாபாத் சிவில் மருத்துவமனைக்கு சென்ற அவர், விபத்தில் காயமடைந்தவர்கள் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும் படிக்க...

உயர்நிலை குழுவுடன் ஆலோசனை

அகமதாபாத் விமான நிலையத்தில் உயர்நிலை குழுவுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். மேலும் படிக்க...

கருப்புப் பெட்டி மீட்பு

விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் கருப்புப் பெட்டி மீட்கப்பட்டுள்ளது.

ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ள கருப்புப் பெட்டியில் உள்ள தரவுகளை ஆராய்ந்து முடிவை வெளியிட 15 நாள்கள் வரை ஆகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...

நடிகரின் உறவினர் துணை விமானி

விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தை இயக்கிய துணை விமானி கிளைவ் குந்தர் தனது உறவினர் என்று நடிகர் விக்ராந்த் மாஸே தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...

மருத்துவ தம்பதி பலி

அகமதாபாத் விமான விபத்தில் உதய்ப்பூரைச் சேர்ந்த மருத்துவ தம்பதி மற்றும் அவர்களது மூன்று குழந்தைகள் பலியாகினர்.

லண்டனில் குடியேறும் கனவோடு இந்தியாவில் இருந்து புறப்பட்ட 5 பேரும் விமானத்தில் எடுத்த புகைப்படம் வைரலாகி வருகின்றது. மேலும் படிக்க...

மனைவியின் அஸ்தி கரைக்க வந்தவரும்

மனைவியின் அஸ்தியை நர்மதை ஆற்றில் கரைக்க லண்டனில் இருந்து வந்த அர்ஜுன் பட்டோலியா, இறுதிச் சடங்குகளை செய்து முடித்துவிட்டு லண்டன் திரும்பும்போது விமான விபத்தில் பலியாகியுள்ளார். மேலும் படிக்க.

அதிர்ஷ்டமான இருக்கையா 11ஏ

இப்படி ஒரு விபத்தில் ஒருவரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்றே கருதிய நிலையிலும், ஒருவர் அதுவும் எழுந்து ஓடிக் கொண்டிருந்தார் என்றால் நம்பத்தான் முடியவில்லை. நடந்திருக்கிறது.

மேலும் படிக்க..

உயிர் தப்பியது ஒருவர் அல்ல இருவர்!

ஏர் இந்தியா விமான விபத்தில் உயிர் பிழைத்தது ஒருவர் அல்ல இருவர் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. பூமி சௌகான் பற்றிய தகவல்களை அறியும்போது. மேலும் படிக்க..

டிஎன்ஏ சோதனை 

விமான விபத்தில் பலியானவர்களின் உடல்களை அடையாளம் காணும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. உறவினர்களிடமிருந்து டிஎன்ஏ மாதிரிகள் சேகரிக்கப்படுகிறது. இந்தப் பணிகள் முடிய 3 நாள்கள் வரை ஆகும் எனத் தகவல்.

உடல்களை அடையாளம் காண

குஜராத் மாநிலம் அகமதாபாதில் நேரிட்ட விமான விபத்தில் பலியான அனைத்து உடல்களையும் அடையாளம் காண்பது என்பது இயலாது என தடய அறிவியல் துறை பேராசிரியர் டாக்டர் நரேஷ் குமார் சோனி தெரிவித்துள்ளார்.

உதவ முன்வந்த எல்ஐசி

ஏர் இந்தியா விமான விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கான எல்ஐசி காப்பீட்டுக் கோரிக்கைகளை சிக்கலின்றி எளிதாக முடித்துக் கொடுக்க எல்ஐசி முன்வந்துள்ளது

லண்டன் பயணத் தேதியை மாற்றியதால் விமான விபத்தில் பலியான விஜய் ரூபானி!

லூதியானா இடைத்தேர்தல் காரணமாக விஜய் ரூபானி தனது லண்டன் பயணத் தேதியை கடைசி நேரத்தில் மாற்றியிருப்பது தெரியவந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com