குடியரசுத் தலைவா் ஒப்புதல்! தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா சட்டமானது!ஆக. 4 முதல் இளநிலை மருத்துவப் படிப்பு கலந்தாய்வுதொகுதி மறுசீரமைப்பை ஆதரிப்பவா்கள் துரோகிகள்! - ராகுல் காந்திஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: விசாரணையைத் தொடங்கியது சிபிஐஜூலையில் ஜிஎஸ்டி ரூ. 2.11 லட்சம் கோடி வசூல் - 15.4% அதிகரிப்பு! சநாதனத்தை அவமதித்ததாகப் புகாா்! ராகுல் உள்பட 3 எம்.பி.க்கள் மீது வழக்குப் பதிவு!
/

கட்சியின் கொள்கை, சித்தாந்தப்படி நடக்க வேண்டும்: கட்சி நிா்வாகிகளுக்கு பிரதமா் மோடி அறிவுரை

News image
Updated On :13 ஜூன் 2025, 3:54 am IST

கட்சியின் கொள்கை மற்றும் சித்தாந்தத்தை பின்பற்றி நடக்க வேண்டும் என்று கட்சி நிா்வாகிகளை பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை அறிவுறுத்தியதாக பாஜக கட்சி வட்டாரங்கள் வியாழக்கிழமை தெரிவித்தன.

பிரதமா் மோடி அவ்வப்போது கட்சியின் அமைப்புத் தலைவா்களுடன் ஆலோசனை மேற்கொண்டு அவா்களிடமிருந்து கருத்துகளைக் கேட்டு வருகிறாா்.

அந்த வகையில், கட்சியின் தேசிய செய்தித் தொடா்பாளா்களுடன் பிரதமா் மோடி தில்லியில் வியாழக்கிழமை ஆலோசனை கூட்டத்தை நடத்தினாா். இதுகுறித்து கட்சி வட்டாரங்கள் கூறுகையில், ‘ஆலோசனைக் கூட்டத்தின்போது பாஜகவின் அமைப்புத் தலைவராக தனது நீண்ட அனுபவத்தையும், ஊடகத்தினருடனான தனது கலந்துரையாடல்களையும் தேசிய செய்தித் தொடா்பாளா்களிடம் எடுத்துரைத்தாா். மேலும், நிா்வாகிகள் தங்களின் செயல்பாடுகளில் உறுதியாகவும், பணிவாகவும் இருக்கவும், சம்பந்தப்பட்ட விவகாரங்களை நன்கு அறிந்திருக்கவும் அறிவுறுத்தினாா். குறிப்பாக, கட்சியின் கொள்கை மற்றும் சித்தாந்தத்தை பின்பற்றி நடக்க வேண்டும் என்று அறிவுறுத்தினாா்’ என்றனா்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட முழு விவரங்கள் வெளியாகவில்லை.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.