
ஒடிசா மாநிலத்தின் சுந்தர்கார் மாவட்டத்தில், நக்சல்களின் வெடிகுண்டு தாக்குதல்களில் மத்திய ரிசர்வ் காவல் படை வீரர் ஒருவர் பலியாகியுள்ளார்.
சுந்தர்கார் மாவட்டத்தின் ரௌர்கெலா பகுதியிலுள்ள, கே பாலங் கிராமத்தில் இன்று (ஜூன் 14) அதிகாலை, மத்திய ரிசர்வ் காவல் படை மற்றும் மாநில காவல் துறையின் சிறப்பு நடவடிக்கைக் குழுவினர் இணைந்து நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அந்தப் பகுதியில் நக்சல்கள் பொறுத்தியிருந்த ஐ.ஈ.டி. எனப்படும் நவீன வெடிகுண்டு-ன் மீது மத்திய ரிசர்வ் காவல் படை வீரர் சத்யபான் குமார் சிங் (வயது 34) கால் வைத்ததாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, அந்த வெடிகுண்டு வெடித்ததில் அவரது இடது காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக, அவரை மீட்டு ரௌர்கேலாவிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சையளித்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன், பலியான வீரர் சத்யபான் குமார் சிங், உத்தரப் பிரதேசத்தின் குஷிநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: மெல்ல அதிகரிக்கும் கரோனா: 7,400 ஆன பாதிப்பு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.