தில்லியில் 100 அடி உயர மொபைல் கோபுரம் இடிந்து விழுந்தது: யாருக்கும் காயம் இல்லை
தில்லியில் 100 அடி உயர மொபைல் கோபுரம் இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தெற்கு தில்லியின் சஃப்தர்ஜங் என்க்ளேவில் 100 அடி உயர மொபைல் கோபுரம் பலத்த காற்று மற்றும் மழை காரணமாக ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடிந்து விழுந்தது.
இடிந்து விழுந்ததால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று போலீஸார் தெரிவித்தனர்.
குடியிருப்பாளர்கள் கூறுகையில், அதிகாலை 4 மணியளவில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது.
சொல்லப் போனால்... சொந்த மண்ணிலேயே அன்னியரைப் போல...
மால்வியா நகரின் முன்னாள் ஆம் ஆத்மி எம்எல்ஏ சோம்நாத் பாரதி அந்த இடத்தைப் பார்வையிட்டு குடியிருப்பாளர்களுடன் கலந்துரையாடினார்.
"பி2 சஃப்தர்ஜங் என்க்ளேவில் குடியிருப்பாளர்களும் நானும் கடும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், அங்கு அமைக்கப்பட்ட ஒரு மொபைல் கோபுரம் நேற்று இரவு விழுந்தது.
இது பகலில் விழுந்திருந்தால் அல்லது பி2 கட்டடங்களை நோக்கி விழுந்திருந்தால் என்ன செய்வது? அத்தகைய அலட்சியம் குற்றமாகும்!" என்று பாரதி எக்ஸ் பதிவு ஒன்றில் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.