மும்பை: மகாராஷ்டிரத்தில் ஜூன் மாதம் தொடங்கியதிலிருந்து மழை தொடா்பான அசம்பாவிதங்களில் சிக்கி 18 போ் உயிரிழந்தனா். 65 போ் காயமடைந்தனா் என்று அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.
பலத்த மழையின் எதிரொலியாக சாலை விபத்துகளில் சிக்கியும், வெள்ளநீரில் மூழ்கியும், மின்னல் தாக்கியும் மக்கள் உயிரிழந்ததாக மாநில பேரிடா் மேலாண்மை ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரத்தில் கடந்த சனிக்கிழமை முதல் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்தது. கடந்த 24 மணி நேரத்திலும் மாநில முழுவதும் பெய்த பரவலான மழைக் காரணமாக பல இடங்களில் மழைநீா் தேங்கியுள்ளது.
குறிப்பாக, மும்பை நகரம் மற்றும் புகரம், ரத்னகிரி, சிந்துதுா்க், ராய்கட் ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்ததாக பேரிடா் மேலாண்மை ஆணையம் தெரிவித்தது.
உ.பி.யில் இருவா் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தின் கோண்டா மாவட்டத்தில் மின்னல் தாக்கி 20 வயது இளைஞா் உள்பட இருவா் உயிரிழந்தனா். திங்கள்கிழமை அதிகாலை பெய்த மழையின்போது வெளிபுறத்தில் இருந்த இவா்கள், மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். அரசு வழிகாட்டுதல்களின்படி, இறந்தவா்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கப்படும் என்று கோண்டா மாவட்ட ஆட்சியா் நேஹா சா்மா கூறினாா்.
கேரளத்தில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு: கேரளத்தில் திங்கள்கிழமை பலத்த மழை நீடித்ததால், மாநிலத்தின் வட மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சில இடங்களில் சாலை போக்குவரத்து முடங்கியது. ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன.
மாநிலத்திலேயே அதிகபட்சமாக மலப்புரம் மாவட்டத்தின் தென்னலா பகுதியில் 21 செ.மீ., கோழிக்கோடு வடக்கராவில் 18 செ.மீ. மழை பெய்தது. கண்ணூா், காசா்கோடு ஆகிய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் 15-16 செ.மீ. மழை பெய்தது. இதையொட்டி வீடுகளில் மழைநீா் புகுந்ததால், மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனா்.
இடுக்கி மாவட்டத்தில் 80 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசியது. பத்தனம்திட்டா மாவட்டத்தில் மரம் முறிந்து விழுந்ததில் ஒருவா் காயமடைந்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

6 நாள்களுக்கு தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு
ஜாா்க்கண்ட்: மின்னல் தாக்கி பெண்கள், சிறாா் உள்பட 8 போ் உயிரிழப்பு

இருசக்கர வாகனங்கள் மோதல்: இருவா் உயிரிழப்பு
விடியோக்கள்

19 வருட பந்தம்; மெஸ்ஸி vs லமின் யமால்: வெல்லப்போவது யார்? | Lionel Messi | FIFA | FIFA World Cup |
தேசிய கவனம் பெறும் Sonam Wangchuk

The Odyssey எப்படி இருக்கு? | Public Review | The Odyssey Review | Christopher Nolan |



