ஆகஸ்ட் 15-ல் வெளியாகும் புதிய மாடல் மஹிந்த்ரா பொலிரோ!

ஆகஸ்ட் 15-ல் வெளியாகும் மஹிந்த்ரா பொலிரோவின் வியக்கவைக்கும் 5 விஷயங்களைப் பற்றி...
மஹிந்த்ரா பொலிரோ
மஹிந்த்ரா பொலிரோ
Published on
Updated on
1 min read

மஹிந்த்ரா நிறுவனத்தில் பொலிரோவின் புதிய மாடல் வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் காரில் உள்ள வியக்க வைக்கும் விஷயங்கள் குறித்து பார்க்கலாம்.

இந்திய மக்களிடையே அடிப்படைப் போக்குவரத்துக்கான தேவையை அதிகம் நிறைவு செய்த கார்களில் மஹிந்த்ராவின் பொலிரோவும் தனி இடத்தைப் பிடித்துள்ளது. அதிகளவில் அரசுத் துறை வாகனமாகவும் பொலிரோ பயன்படுத்தப்பட்டு வருகிறது.

எஸ்யுவி வகை கார்களைத் தயாரிக்கும் மஹிந்த்ரா நிறுவனம் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாகவே இந்தியாவில் கொடிகட்டி பறந்து வருகிறது. இருந்தாலும், வேறு எந்த மாறுதல்களையும் இந்த காரில் பயன்படுத்தவே இல்லை. அதைத் தொடர்ந்து டியுவி300 பொலிரோ நியோ என்ற காரை அறிமுகம் செய்தது. அதை விட்டுவிட்டு புதிய மாடல் ஒன்றை வெளியிட மஹிந்த்ரா நிறுவனம் தயாராகவுள்ளது.

இந்த காரானது ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியிடப்படவுள்ளதாகவும், இது மஹிந்த்ரா தார் ஸ்போர்ட் என்றழைக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் கைபிடிகள் உள்ளே இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. சொகுசாக இருக்கும் வகையில் இருக்கைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும் டிஎஃப்டி திரை, இரண்டு வகை காலநிலை கட்டுப்பாடு, சன் ரூபிங், நல்ல காற்றோட்டமான முன்பக்க இருக்கை ஆகியவை உள்ளன.

வியக்கவைக்கும் அம்சங்கள்

தானகவே இயங்கும் வகையிலான ஹெட் லைட்டுகள் மற்றும் வைப்பர்கள், சாவி இல்லாமலேயே கதவைத் திறக்க சென்சார்கள், வாகனத்த ஆன் மற்றும் ஆஃப் செய்ய புஷ் பட்டன் ஆகியவை உள்ளன. இது மிகவும் விலைமிக்க காரை போன்ற அனுபவத்தை கொடுக்கிறது.

என்ஜின் செயல்பாடு

இந்த காரில் பெட்ரோல் மற்றும் டீசல் வகை என இரண்டும் உள்ளன. ஸ்கார்பியோ போன்ற மாறுதலுடன்கூட திறனைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விலை

மஹிந்திரா பொலிரோவின் விலை ரூ.10.00 முதல் ரூ.12.50 லட்சம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.    

  • அடிப்படை (B4): சுமார் ரூ.10 லட்சம்.

  • மிட்-ரேஞ்ச் மாடல் (B6): ரூ.10.50 லட்சம்.

  • சிறந்த மாடல் (B6): ரூ.10.93 லட்சம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Open in App
Dinamani
www.dinamani.com