10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு! மார்ச் - 17 முதல் ஏப்ரல் 12ஆம் தேதி வரைமார்ச் 3 முதல் 29ஆம் தேதி வரை பிளஸ் 2 பொதுத் தேர்வுகள்!வெளியானது 10, 12-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு அட்டவணை! ஒரு யூனிட்டை ரூ. 35-க்கு எந்த மாநிலமும் வாங்கியதில்லை! பெ. சண்முகம் விமர்சனம்!சவூதியில் இலங்கைத் தமிழர் அனோஜனின் மரண தண்டனை ரத்து!போக்ஸோ வீரமணி வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய மனு தள்ளுபடி!3-வது நாளாக தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம் (அக். 14)

இந்தியாவுடன் போரை நிறுத்த வேண்டுகோள்! ஒப்புக்கொண்ட பாகிஸ்தான் துணை பிரதமர்!

இந்தியாவுடன் போரை நிறுத்த பாகிஸ்தான் வேண்டுகோள் விடுத்ததாக அந்நாட்டு துணை பிரதமர் இஷாக் தார் தெரிவித்தார்.

Published On :

இந்தியாவுடன் போரை நிறுத்த பாகிஸ்தான் வேண்டுகோள் விடுத்ததாக அந்நாட்டு துணை பிரதமர் தெரிவித்தார்.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. ஆனால், இந்தியாவில் மக்கள் வசிக்கும் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதனையடுத்து, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் மூண்டது. போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முற்பட்டதையடுத்து, பாகிஸ்தானின் வேண்டுகோளுக்கு இணங்க, இந்தியா போரை நிறுத்தியது.

இதனிடையே, பாகிஸ்தானின் முக்கிய விமானத் தளம் தாக்குதலுக்கு உள்ளானதால், போரை நிறுத்த பாகிஸ்தான் ஒப்புக் கொண்டதாக பாகிஸ்தான் துணை பிரதமர் இஷாக் தார் கூறியுள்ளார்.

இதுகுறித்து, அவர் கூறுகையில், ``நூர் கான் மற்றும் ஷோர்கோட் விமானத் தளங்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. தாக்குதலின்போது, அமெரிக்க வெளியுறவு அமைச்சருடன் நான் பேசியது குறித்து சௌதி இளவரசர் பைசன் கேட்டறிந்தார்.

போரை நிறுத்த இந்தியா ஒப்புக்கொண்டால், பாகிஸ்தானும் ஒப்புக் கொள்ளுமா என்று என்னை பைசல் கேட்டார். நானும் சரி என்று கூறினேன்.

தொடர்ந்து, மீண்டும் அழைத்த பைசல், இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரிடம் பேசியதாகக் கூறினார். என்னிடம் சொன்னதைத் தான் ஜெய்சங்கரிடமும் கூறியதாகச் சொன்னார்’’ என்று தெரிவித்தார்.

ஆனால், இந்தியா - பாகிஸ்தான் இடையே போரை நிறுத்த, தான் மட்டுமே காரணம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபகாலமாக கூறி வந்தார். இரு நாடுகளுடனான வர்த்தகத்தை நிறுத்தி விடுவதாகக் கூறி, போரை நிறுத்தியதாக டிரம்ப் கூறி வந்தார்.

இந்த நிலையில், போர் நிறுத்த முடிவை இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள்தான் முடிவெடுத்தன என்று வியாழக்கிழமையில் டிரம்ப் ஒப்புக் கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.