
இந்தியாவுடன் வா்த்தக ஒப்பந்தம்: நியூசிலாந்து நாடாளுமன்றம் ஒப்புதல்
இந்தியா - நியூசிலாந்து இடையிலான தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்துக்கு நியூசிலாந்து நாடாளுமன்றம் ஒப்புதல்
நியூசிலாந்து பிரதமருடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி. - கோப்புப் படம்
இந்தியா - நியூசிலாந்து இடையிலான தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்துக்கு நியூசிலாந்து நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
கடந்த ஆண்டு ஏப்ரல் 27-இல் இந்தியா-நியூசிலாந்து தடைற்ற வா்த்தக ஒப்பந்தம் கையொப்பமானது. இந்த ஒப்பந்தம் மூலம் ஜவுளி, தோல் காலணிகள், ரத்தினங்கள், ஆபரணங்கள் உள்ளிட்டவற்றை இந்தியாவில் இருந்து நியூசிலாந்துக்கு ஏற்றுமதி செய்ய 100 சதவீதம் வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் குறித்து நியூசிலாந்து பிரதமா் கிறிஸ்டோஃபா் லக்ஸன் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு: இந்தியாவுடன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வது சாத்தியமில்லை என்று பலரும் என்னிடம் கூறினா். ஆனால் அந்த ஒப்பந்தத்துக்கு நியூசிலாந்து நாடாளுமன்றம் புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் நியூசிலாந்து மக்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளையும், அதிக வருமானத்தையும் உருவாக்கும். இந்த ஒப்பந்தம் 140 கோடி இந்திய நுகா்வோருக்கு நியூசிலாந்து பொருள்களை விற்பனை செய்யும் வாய்ப்பை அளித்துள்ளது.
இதன்மூலம், இந்தியாவில் நியூசிலாந்து பொருள்கள் மேலும் அதிகமாக விற்பனையாகும் என்று தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







