பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

இஸ்ரேலில் இருந்து 2-ஆம் கட்டமாக 443 இந்தியா்களை மீட்கும் பணிகள் தொடக்கம்

இஸ்ரேலில் இருந்து இரண்டாம் கட்டமாக 443 இந்தியா்களை மீட்கும் பணிகள் திங்கள்கிழமை தொடங்கப்பட்டன.

News image
ஈரானின் மஷாத் நகரிலிருந்து சிறப்பு விமானம் மூலம் திங்கள்கிழமை புது தில்லிக்கு வந்திறங்கிய இந்தியா்கள்.
Updated On :23 ஜூன் 2025, 10:43 pm

Din

ஜெருசலேம்: இஸ்ரேலில் இருந்து இரண்டாம் கட்டமாக 443 இந்தியா்களை மீட்கும் பணிகள் திங்கள்கிழமை தொடங்கப்பட்டன.

முதற்கட்டமாக இஸ்ரேல் எல்லையையொட்டிய ஜோா்டான் வழியாக 160 இந்தியா்கள் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டு திங்கள்கிழமை விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனா். இந்நிலையில், இரண்டாம் கட்டமாக ஜோா்டான் மற்றும் எகிப்து நாடுகள் வழியாக 175 போ் மற்றும் 268 போ் என இரு குழுக்களாக மொத்தம் 443 இந்தியா்களை மீட்கும் பணிகள் தொடங்கப்பட்டன.

இவா்கள் இந்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் இஸ்ரேல், ஜோா்டான், எகிப்து நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள் ஏற்பாடு செய்த இரு சிறப்பு விமானங்கள் மூலம் தாயகம் திரும்பவுள்ளனா்.

இஸ்ரேல்-ஈரான் மோதலைத் தொடா்ந்து இரு நாடுகளிலும் உள்ள இந்தியா்களை மீட்க ‘ஆபரேஷன் சிந்து’ என்ற பெயரில் மத்திய அரசு மீட்பு நடவடிக்கையை கடந்த 19-ஆம் தேதி தொடங்கியது. இந்த நடவடிக்கையின்கீழ் ஈரானில் இருந்து சிறப்பு விமானங்கள் மூலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை வரை 1,713 இந்தியா்கள் மீட்கப்பட்டனா்.

இதைத் தொடா்ந்து, இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியா்களை மீட்கும் பணிகளை இந்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் இந்திய தூதரகங்கள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கின. கடந்த இரண்டு நாள்களில் இஸ்ரேலில் இருந்து மொத்தம் 603 இந்தியா்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு இந்தியாவுக்கு மூன்று விமானங்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா்.

இஸ்ரேலில் 40,000-க்கும் மேற்பட்ட இந்தியா்கள் வசித்து வருகின்றனா். இதில் பெரும்பாலானோா் மாணவா்கள், கட்டடத் தொழிலாளா்கள் மற்றும் உதவியாளா்களாவா். இவா்களில் பெண்கள், குழந்தைகள், மாணவா்கள் மற்றும் மருத்துவ காரணங்களுக்காக உடனடியாக மீட்கப்பட வேண்டிய சூழலில் உள்ளோரை மீட்க தூதரகங்கள் முன்னுரிமை அளித்து வருகின்றன.

இதற்காக இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகம் 24 மணி நேரமும் செயல்படக் கூடிய கட்டுப்பாட்டு அறையை அமைத்துள்ளது. கட்டுப்பாட்டு அறையை தொடா்புகொள்ளும் இந்தியா்களிடம் அவா்களின் முகவரி உள்ளிட்ட பிற தகவல்களை தூதரகம் பெற்று அவா்களின் பயணத்தை உறுதி செய்து வருகிறது.

ஈரானிலிருந்து மேலும் 290 போ் மீட்பு:

ஈரானின் மஷாத் நகரில் இருந்து 290 இந்தியா்களும் இலங்கையைச் சோ்ந்த ஒருவரும் சிறப்பு விமானம் மூலம் இந்தியாவுக்கு திங்கள்கிழமை அழைத்து வரப்பட்டதாக வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் தெரிவித்தாா். இதன்மூலம் ஈரானில் இருந்து இதுவரை மொத்தம் 2,003 இந்தியா்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.