மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மாம்பழச் சாறு, பாசிப்பயறு அல்வா.. இந்திய வீரா் சுபான்ஷு சுக்லா கொண்டுசெல்லும் பொருள்கள்!

மாம்பழச் சாறு, பாசிப்பயறு அல்வா உள்ளிட்டவற்றை இந்திய வீரா் சுபான்ஷு சுக்லா கொண்டுசெல்கிறார்.

News image
இந்திய விண்வெளி வீரா் சுபான்ஷு சுக்லா
Updated On :25 ஜூன் 2025, 7:06 am

இணையதளச் செய்திப் பிரிவு

‘ஆக்ஸிம்-4’ திட்டத்தின்கீழ் சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு இந்திய விண்வெளி வீரா் சுபான்ஷு சுக்லா குழு புறப்பட்டுள்ளது. சுக்லா தன்னுடன் எடுத்துச் செல்லும் பொருள்களைப் பற்றி பகிர்ந்துகொண்ட தகவல் வெளியாகியிருக்கிறது.

அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் உள்ள நாசா கென்னடி விண்வெளி நிலையத்தில் இருந்து எலான் மஸ்குக்குச் சொந்தமான ‘ஸ்பேஸ்-எக்ஸ்’ நிறுவனத்தின் ‘ஃபால்கன் 9’ ஏவுகணை மூலம் ‘டிராகன்’ விண்கலம் இன்று வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

பல்வேறு காரணங்களால் ஆறு முறை பயணம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இன்று பயணம் வெற்றிகரமாகத் தொடங்கியது. ‘டிராகன்’ விண்கலத்தில் 36 மணி நேரப் பயணத்துக்குப் பிறகு அதாவது வியாழக்கிழமை மாலை 4.30 மணியளவில் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட விண்வெளி வீரர்கள் சா்வதேச விண்வெளி நிலையத்தைச் சென்றடைவார்கள். மனிதா்களை விண்ணுக்கு அனுப்பும் இந்தியாவின் ‘ககன்யான்’ திட்டத்துக்காக தோ்வான வீரா்களில் ஒருவரான சுக்லா, அனுபவப் பயிற்சி நோக்கங்களுக்காக இந்த விண்வெளிப் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

கடைசியாக கடந்த 1984-இல் இந்திய வீரா் ராகேஷ் சா்மா விண்வெளிக்குப் பயணித்தாா். இப்போது 40 ஆண்டுகளுக்குப் பிறகு விண்வெளிப் பயணம் மேற்கொள்ளும் முதல் இந்தியா வீரா் என்ற பெருமையை சுக்லா பெற்றுள்ளார். இவா், இந்திய விமானப் படையின் திறன்மிக்க பரிசோதனை விமானியாகவும் உள்ளார்.

இவர் தன்னுடன் விண்வெளிக்கு கொண்டு செல்லும் உடைமைகளில், மாம்பழச் சாறு, பாசிப்பயறு அல்வா மற்றும் கேரட் அல்வா உள்ளிட்ட இந்திய உணவுகளை எடுத்துச் செல்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து விண்வெளிப் பயணத்தை மேற்கொள்வதற்கு முன்பு, செய்தி ஊடகத்திடம் பேசிய சுபான்ஷு சுக்லா, விண்வெளியில் சாப்பிட நிறைய உணவுப்பொருள்கள் இருக்கும். ஆனால், நான் என்னுடன் மாம்பழச் சாறு, காரட் அல்வா, பாசிப்பயறு அல்வா போன்றவற்றை எடுத்துச் செல்கிறேன். இதையெல்லாம் நான் சாப்பிட வேண்டும் என்று மட்டும் கொண்டு செல்லவில்லை. விண்வெளி வீரர்களுக்கும் கொடுத்து ஒன்றாக சாப்பிடவே விரும்புகிறேன் என்று கூறியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அன்போடு வெறும் உணவுப் பொருள்களை மட்டும் நான் எடுத்துச் செல்லவில்லை. இந்தியாவின் முதல் விண்வெளி வீரர் ராகேஷ் சர்மாவுக்காக ஒரு சிறப்பான ஆச்சரியமான பொருளையும் எடுத்துச் செல்கிறேன். அவர்தான் எனக்கு நிறைய விஷயங்களை எடுத்துச் சொன்னார். விண்வெளி பயணத்துக்கு எவ்வாறு தயாராவது, என்னென்ன எடுத்துச் செல்ல வேண்டும் என்பதையெல்லாம் எடுத்துக் கூறினார் என்று கூறிய சுக்லா, ராகேஷ் சர்மாவுக்காக தான் விண்வெளிக்கு எடுத்துச் செல்லும் பொருள் என்ன என்பதை ரகசியமாக வைத்திருப்பதாகவும், நான் விண்வெளியிலிருந்து திரும்பி வரும்போது அந்த ஆச்சரிய பரிசை வெளிப்படுத்துவேன் என்றும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் செயல்படும் மனித விண்வெளிப் பயண சேவைகள் நிறுவனமான ‘ஆக்ஸிம் ஸ்பேஸ்’ நிறுவனத்தின் ‘ஆக்ஸிம்-4’ திட்டத்தின்கீழ் இப்பயணம் அமைந்துள்ளது.

சா்வதேச விண்வெளி நிலையத்தில் சுக்லா 14 நாள்கள் தங்கியிருந்து, ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளவிருக்கிறாா்.

என்னென்னப் பணிகள்?

புவியீா்ப்பு சக்தி குறைவாக உள்ள விண்வெளிச் சூழலில் பச்சைப்பயிறு, வெந்தயம் ஆகிய விதைகளை வளா்த்து சுக்லா ஆய்வு மேற்கொள்கிறாா். எதிா்காலத்தில் நீண்ட கால விண்வெளி பயணத்திற்கு அவசியமான விண்வெளி ஊட்டச்சத்து மற்றும் தன்னிறைவு வாழ்க்கை ஆதரவு அமைப்புக்கு முன்னோட்டமாக இந்த சோதனைகள் திட்டமிடப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.