தேர்தல் ஆணையம் நோக்கி அக். 6 பேரணி! போராட்டங்களை அறிவித்த இந்தியா கூட்டணி!ரூ. 100 கோடி மோசடி வழக்கு: அன்பில் மகேஸுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க முடியாது! உயர் நீதிமன்றம்தவெகவில் இணைகிறார் அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை!தில்லியில் இந்தியா கூட்டணிக் கூட்டம் தொடங்கியது! 19 கட்சிகள் பங்கேற்பு!துப்பாக்கி சுடுதல் கலப்பு இரட்டையரில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்முன்னாள் அமைச்சர் ரகுபதிக்கு எதிரான தேர்தல் வழக்கு நிராகரிப்பு!முதல்வா் விஜய் வருகையால் கோவையில் இன்று போக்குவரத்து மாற்றம்11 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஇரு நாள்களில் 5,000 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்புற்றுநோய் மருந்துகளை 10 மடங்கு அதிக விலைக்கு விற்பது படுகொலைக்குச் சமம்: உச்சநீதிமன்றம்

ஹிமாசலில் கனமழை, பனிப்பொழிவு: 538 சாலைகள் மூடல்!

ஹிமாசல் பிரதேசத்தில் கனமழை மற்றும் பனிப்பொழிவால் பல மாவட்டங்கள் பாதிப்படைந்தன.

கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ள தௌலதார் மலைத்தொடர்

Published On :

ஹிமாசல் பிரதேசத்தில் மழை மற்றும் கடுமையான பனிப்பொழிவு காரணமாக 538 சாலைகள் மூடப்பட்டதால் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

ஹிமாசல் பிரதேசத்தில் மழை, பனிப்பொழிவு காரணமாக பல மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. குலு மாவட்டத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் வாகனங்கள் அடித்து ச் செல்லப்பட்டன. பல மாவட்டங்களில் மண்சரிவு ஏற்பட்டது.

இதனால், மாநிலம் முழுவதும் 5 தேசிய நெடுஞ்சாலைகள் உள்பட 578 சாலைகள் மூடப்பட்டுள்ளதாக மாநில பேரிட மேலாண்மை வாரியம் தெரிவித்துள்ளது. மேலும், 279 நீர் வழிப் பாதைகள், 2263 மின்மாற்றிகள் ஆகியவை முடங்கியுள்ளன.

மேற்கத்திய இடையூறு எனப்படும் வெப்பமண்டல புயல் உருவானதால் இவ்வாறு காலநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது. பிப். 25 அன்று தொடங்கிய மழையும் பனிப்பொழிவும் இன்னும் தொடர்கிறது என வானிலை ஆய்வு மையத்தினர் தெரிவித்தனர்.

இது நாளை (மார்ச் 2) மீண்டும் தொடங்கும் என்றும், இதன் தாக்கம் அடுத்தடுத்த நாள்களில் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. குலு, மந்தி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் கூறப்படுகிறது.

மார்ச் 5-க்குப் பின்னரே வானிலையில் மாற்றம் என்று ஆய்வு மையத்தினர் கூறினர்.

”அருணாச்சலப் பிரதேசத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இந்த வெப்ப மண்டல அலைகள் கிழக்கு திசையில் நகர்வதால் தமிழ்நாடு, கேரளா மற்றும் லட்சத்தீவுகள் உள்பட தென்னிந்தியப் பகுதிகளில் கனமழை பெய்யும். 3-4 நாட்களில் புதிய மேற்கத்திய புயல் வருமென எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வடக்கு மலைப்பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்யும்” என இந்திய வானிலை ஆய்வு மையத்தைச் சேர்ந்த ஆய்வாளர் சோமா சென் ரே தெரிவித்தார்.

மோசமான வானிலை காரணமாக மாநிலத்தில் பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் ஆறுகள் மற்றும் ஓடைகள் இருக்கும் பகுதிகளில் இருந்து மக்கள் விலகி இருக்குமாறு முதலமைச்சர் சுக்விந்தர் சிங் வலியுறுத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.