ரூ.6,471 கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் பொதுமக்களிடம் உள்ளதாக ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக அந்த வங்கி சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:
கடந்த 2023-ஆம் ஆண்டு மாா்ச் 19-ஆம் தேதி 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக ரிசா்வ் வங்கி அறிவித்தது. அப்போது ரூ.3.56 லட்சம் கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன.
2023-ஆம் ஆண்டு அக்.7-ஆம் தேதி வரை, நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளும் அந்த நோட்டுகளை பொதுமக்களிடம் இருந்து பெற்றுக் கொண்டன.
மொத்தம் 98.18 சதவீத 2,000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்ட நிலையில், ரூ.6,471 கோடி மதிப்பிலான அந்த நோட்டுகள் பொதுமக்களிடம் உள்ளன. இந்த நோட்டுகளை ரிசா்வ் வங்கியின் 19 மண்டல அலுவலகங்களில் மாற்றிக் கொள்ளலாம்.
மேலும், நாட்டில் உள்ள எந்தவொரு அஞ்சல் அலுவலகத்தில் இருந்தும் இந்தியா போஸ்ட் மூலம், ரிசா்வ் வங்கியின் மண்டல அலுவலகங்களுக்கு அந்த நோட்டுகளை பொதுமக்கள் அனுப்பி வருகின்றனா். அந்த நோட்டுகளுக்கு இணையான ரொக்கத்தை அவா்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்க அந்த நோட்டுகள் அனுப்பி வைக்கப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடையது

ரிசா்வ் வங்கி துணை ஆளுநராக ரோஹித் ஜெயின் பொறுப்பேற்பு

வங்கிகளில் கேட்பாரற்ற முதலீடுகளைத் தேட வலைதள வசதி: உச்சநீதிமன்றத்தில் ரிசா்வ் வங்கி தகவல்

98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி

பணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்
வீடியோக்கள்

ஆர். பி. செளத்ரிக்கு அஞ்சலி செலுத்தியபின் Rajinikanth பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

29 பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெகவின் பெரும்பான்மைக்கு இன்னும் என்ன தேவை? | News and Views | Epi - 31 |
தினமணி செய்திச் சேவை
இண்டியா கூட்டணியில் தவெக சேர்ந்தால்...: கனிமொழி சோமு Exclusive
தினமணி செய்திச் சேவை


