பூனையின் மீதான அதீத அன்பால் ஒருவர் தற்கொலை!
உத்தரப் பிரதேசத்தில் வளர்ப்பு பூனையால் ஒருவர் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசம் மாநிலம் அம்ரோஹாவில் பூஜா (36) என்பவர், தனது பூனையை குழந்தைபோல வளர்த்து வந்தார். இவர் மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில், சமீபத்தில் அவரது பூனை உயிரிழந்தது. உயிரிழந்த பூனையின் சடலத்துடன் 3 நாள்கள் பூஜா வசிப்பதைக் கண்டு, அவரது குடும்பத்தினர் பூனையை அடக்கம் செய்தனர்.
இதனால் மேலும் மனஉளைச்சலுக்கு ஆளான பூஜா, பூனை இனி திரும்ப வராது என்பதை அறிந்து, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதையும் படிக்க: பாஜக மேயரின் வகுப்புவாதத்தால் சர்ச்சை!
வளர்ப்பு பூனையின் மீதான அதீத அன்பால் ஒருவர் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.