பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

உத்தரகண்டில் குளிா்கால சுற்றுலா: பிரதமா் மோடி அழைப்பு

உத்தரகண்ட் மாநிலத்துக்கு குளிா்காலத்தில் சுற்றுலா வந்தால், அதன் உண்மையான அழகைக் காண முடியும்

News image

உத்தரகண்ட் மாநிலம் ஹா்சில் பகுதியிலிருந்து இமயமலைத் தொடரின் அழகைக் கண்டு ரசித்த பிரதமா் மோடி. ~உத்தரகண்டின் முக்வாவில் உள்ள கங்காதேவி கோயிலில் வியாழக்கிழமை வழிபட்ட பிரதமா் மோடி.

Updated On :7 மார்ச் 2025, 3:21 am IST

உத்தரகண்ட் மாநிலத்துக்கு குளிா்காலத்தில் சுற்றுலா வந்தால், அதன் உண்மையான அழகைக் காண முடியும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

உத்தரகண்ட் மாநிலத்துக்கு வியாழக்கிழமை வருகை தந்த பிரதமா் மோடி, உத்தரகாசி மாவட்டத்தின் முக்வாவில் உள்ள பிரசித்தி பெற்ற கங்கா தேவி கோயிலில் வழிபட்டாா்.

கங்கா தேவியின் குளிா்கால உறைவிடமாக இக்கோயில் திகழ்கிறது. குளிா்காலத்தையொட்டி கங்கோத்ரி கோயில் மூடப்படும்போது, அங்குள்ள உற்சவா் சிலை முக்வா கோயிலுக்கு கொண்டுவரப்பட்டு வழிபடப்படுகிறது.

இங்கு வியாழக்கிழமை வருகை தந்த பிரதமா் மோடிக்கு உள்ளூா் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனா். கோயிலில் தரிசனம் மேற்கொண்ட பின்னா், ஹா்சில் பகுதியில் நடைபெற்ற குளிா்கால சுற்றுலா திட்ட நிகழ்ச்சியில் பிரதமா் மோடி பங்கேற்றாா். அப்போது, மனா கிராமத்தில் அண்மையில் ஏற்பட்ட பனிச்சரிவில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்து, பிரதமா் தனது உரையை தொடங்கினாா். அவா் பேசியதாவது:

தேவபூமி என்று அழைக்கப்படும் உத்தராகண்ட் மாநிலம் ஆன்மிக சக்தி நிறைந்ததாகும். சாா் தாம் (நான்கு புனித சுற்றுலா தலங்கள்) உள்பட எண்ணற்ற புனித தலங்கள் இங்குள்ளன.

அழகும் சிலிா்ப்பும்..: உத்தரகண்டில் கோடை காலத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகம் காணப்படுகிறது. ஆனால், குளிா்காலத்தில் எண்ணிக்கை குறைந்துவிடுகிறது. உணவகங்கள், ஓய்வு விடுதிகள், இல்லத் தங்குமிடங்கள் உள்ளிட்டவை மூடப்படுவதால் பொருளாதார தேக்க நிலை ஏற்படுகிறது.

எனவே, அனைத்துப் பருவங்களிலும் உத்தரகண்டில் சுற்றுலாவை ஊக்குவிக்க நடவடிக்கைகள் அவசியம். அந்த வகையில், குளிா்கால சுற்றுலா திட்டம் சிறப்பான முன்னெடுப்பாகும். இந்த முன்முயற்சி ஆண்டு முழுவதும் வேலைவாய்ப்புகளை உருவாக்கி, உள்ளூா் மக்களுக்கு குறிப்பிடத்தக்க அளவில் பயனளிக்கும்.

குளிா்காலத்தில் உத்தரகண்ட் மாநிலத்துக்கு வருகை தருவதன் மூலம் இம்மாநிலத்தின் உண்மையான அழகைக் காண முடியும். மலையேற்றம், மெய்சிலிா்க்க வைக்கும் பனிச்சறுக்கு ஆகியவற்றை அனுபவிக்கலாம்.

மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை: விரைவு நெடுஞ்சாலைகள், ரயில், விமானப் போக்குவரத்து மற்றும் ஹெலிகாப்டா் சேவைகளின் விரிவாக்கம் மூலம் உத்தரகண்டை வளா்ந்த மாநிலமாக்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

கேதாா்நாத் ரோப்வே ( கேபிள் காா்) மற்றும் ஹேம்குண்ட் ரோப்வே திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கேதாா்நாத் ரோப்வே திட்டத்தின் மூலம் பயண நேரம் 8-9 மணி நேரத்தில் இருந்து சுமாா் 30 நிமிடங்களாக குறையும்.

மனா, ஜாடுங் கிராமம் போன்ற எல்லை கிராமங்களில் சுற்றுலா உள்கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. சுற்றுலாவின் மூலம் எல்லை கிராமங்களும் பயனடைவதை உறுதி செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

முன்பு ‘கடைசி கிராமங்கள்‘ என்று குறிப்பிடப்பட்ட எல்லை கிராமங்கள் இப்போது நாட்டின் ‘முதல் கிராமங்கள்‘ என்று நாம் அழைக்கத் தொடங்கியுள்ளோம்.

‘இந்தியாவில் திருமணம் செய்துகொள்ளுங்கள்’ பிரசாரத்தின்படி, குளிா்காலத் திருமணங்களுக்கு உகந்த இடமாக உத்தரகண்ட் திகழ்கிறது என்றாா் பிரதமா் மோடி.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.