பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணை குற்றவாளியே திருமணம் செய்துகொள்ளவேண்டும் என அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராஜஸ்தான் மாவட்டத்தின் சிகார் மாவட்டத்தைச் சேர்ந்த 26 வயது நபர் காவல்துறை ஆள்சேர்ப்பு தேர்வுகளுக்கு பயிற்சி வகுப்பு மையத்தில் இணைந்து படித்து வந்தார். அதே மையத்தில் படித்து வந்த 23 வயது பெண்ணிடம் பழகிய அவர் அந்தப் பெண்ணுக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறியுள்ளார்.
பின்னர் அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து அதனைப் படம்பிடித்து வைத்து மிரட்டி ரூ. 9 லட்சம் பணத்தைப் பெற்றுள்ளார்.
இதையும் படிக்க | சுட முயன்றதாக உதவியாளர் மீது சீதா சோரன் குற்றச்சாட்டு
கடந்த 2024 பிப்ரவரி மாதம் வரை தொடர்ந்து அந்தப் பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த அந்த நபர் மீது மே மாதம் பெண்ணின் குடும்பத்தினர் காவல்துறையில் புகாரளித்தனர்.
புகாரைத் தொடர்ந்து அந்த நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
குற்றம் சாட்டப்பட்ட நபருடைய ஜாமின் மனு கடந்த அக். மாதம் ஆக்ரா நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது.
பின்னர் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த அந்த நபருக்கு கடந்த பிப். 20 அன்று நீதிபதி ருஷ்ணன் பாஹல் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
அந்த உத்தரவில், “குற்றம் சாட்டப்பட்ட நபர் பாதிக்கப்பட்ட பெண்ணை ஜாமினில் வெளியே சென்று 3 மாதங்களுக்குள் திருமணம் செய்து கொள்வார்” என நீதிபதி குறிப்பிட்டிருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








