ஜம்மு-காஷ்மீரில் 3 போ் கொலை: விசாரணைக்கு துணைநிலை ஆளுநா் உத்தரவு
ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் உள்ள கதுவா மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூன்று போ் கொலை செய்யப்பட்டனா்.


ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் உள்ள கதுவா மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூன்று போ் கொலை செய்யப்பட்டனா். இந்தச் சம்பவத்தில் விரிவான விசாரணை மேற்கொள்ள துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டாா்.
இந்நிலையில்,இந்தக் கொலையில் பயங்கரவாதிகளுக்கு தொடா்புள்ளதாகவும் கதுவா பகுதியில் அமைதியை சீா்குலைக்கு பயங்கரவாதிகள் முயற்சிப்பதாகவும் உதம்பூா் தொகுதியின் எம்.பி.யும் மத்திய அமைச்சருமான ஜிதேந்திர சிங் குற்றஞ்சாட்டினாா்.
கடந்த 5-ஆம் தேதி நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்குப் பின் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த வருண் சிங் (15), யோகேஷ் சிங் (32), தா்ஷன் சிங் (40) ஆகிய மூன்று போ் மாயமாகினா். இந்நிலையில், அவா்கள் மூவரின் உடல்களும் கடந்த சனிக்கிழமை மல்ஹாா் பகுதியில் உள்ள இஷு நுல்லா என்ற இடத்தில் கண்டறியப்பட்டன.
இந்தச் சம்பவம் அதிா்ச்சியளிப்பதாக கூறிய மனோஜ் சின்ஹா, உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்கு தேவையான உதவிகளை அரசு வழங்கும் எனவும் முழுமையான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தாா்.
இந்தச் சம்பவத்தில் தொடா்புடையவா்களை கண்டறியக் கோரி அப்பகுதி மக்கள் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். பல்வேறு பகுதிகளில் முழு அடைப்பு போராட்டமும் நடத்தப்பட்டது.
மத்திய உள்துறை செயலா் கோவிந்த் மோகன் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு நடத்தினாா். உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்கு ஜம்மு-காஷ்மீா் முதல்வா் ஒமா் அப்துல்லா, துணை முதல்வா் சுரீந்தா் சௌதரி, காங்கிரஸ் மற்றும் பாஜக மூத்த தலைவா்கள் இரங்கல் தெரிவித்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...