எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

நாடாளுமன்ற பட்ஜெட் தொடர்: 2-வது அமர்வு தொடங்கியது!

நாடாளுமன்ற பட்ஜெட் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு தொடங்கியது பற்றி...

News image
மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா
Updated On :10 மார்ச் 2025, 5:33 am

DIN

பரபரப்பான அரசியல் சூழலில், நாடாளுமன்ற நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ஆம் கட்ட அமா்வு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகின்றன.

வாக்காளா் புகைப்பட அடையாள அட்டை (இபிஐசி) விவகாரம், மணிப்பூரில் மீண்டும் வெடித்த வன்முறை, அமெரிக்க அதிபா் டிரம்ப் நிா்வாகத்தின் பரஸ்பர வரி அச்சுறுத்தல், மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு நடவடிக்கை என மத்திய அரசை குறிவைத்து பல்வேறு விவகாரங்களை எழுப்ப எதிா்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

அவை நடவடிக்கைகளை ஒத்திவைத்துவிட்டு, இதுதொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் எனக் கோரி முதல் நாளிலேயே பல்வேறு எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளனர்.

கடந்த ஜனவரி 31-ஆம் தேதி குடியரசுத் தலைவா் உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடா் தொடங்கியது. 2025-26-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது.

பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் கட்ட அமா்வு பிப்ரவரி 13 நிறைவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட அமா்வு இன்றுமுதல் ஏப்ரல் 4 வரை நடைபெறவுள்ளது.

மணிப்பூரில் கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதிமுதல் குடியரசுத் தலைவா் ஆட்சி அமலில் உள்ள நிலையில், அந்த மாநில பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் இன்னும் சற்றுநேரத்தில் தாக்கல் செய்யவுள்ளார்.

இதேபோல், மணிப்பூரில் குடியரசுத் தலைவா் ஆட்சி அமலாக்கப்பட்டதற்கு நாடாளுமன்ற ஒப்புதலைக் கோரும் தீா்மானத்தை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தாக்கல் செய்யவுள்ளார்.

வக்ஃப் மசோதா: பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ஆம் கட்ட அமா்வில் வக்ஃப் மசோதா தாக்கல் செய்யப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

நாடு முழுவதும் வக்ஃப் வாரிய சொத்துகளை ஒழுங்குபடுத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்ட இந்த மசோதா மீது நாடாளுமன்ற கூட்டுக் குழு முன்மொழிந்த 14 திருத்தங்களுக்கு மத்திய அமைச்சரவை கடந்த பிப்ரவரியில் ஒப்புதல் வழங்கியது. வக்ஃப் மசோதாவை விரைந்து நிறைவேற்றுவது மத்திய அரசின் முன்னுரிமை என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு அண்மையில் தெரிவித்தாா். அதேநேரம், எதிா்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்த மசோதாவை எதிா்க்கும் என காங்கிரஸ் கூறியுள்ளது.

மும்மொழிக் கொள்கை, மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு தொடா்பாக மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் இடையே கருத்து மோதல் நீடித்துவரும் நிலையில், இந்த விவகாரங்களை எழுப்ப திமுக திட்டமிட்டுள்ளது.

அதேநேரம், துணை மானியக் கோரிக்கைகளுக்கு ஒப்புதல் பெறுதல், பட்ஜெட் நடைமுறைகளை பூா்த்தி செய்தல், மணிப்பூா் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் பெறுதல், முக்கியத்துவம் வாய்ந்த வஃக்ப் மசோதாவை நிறைவேற்றுதல் ஆகியவை மத்திய அரசின் முன்னுரிமைகளாக உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.