உ.பி.யில் தனியார் பல்கலைக்கழக மாணவர்கள் திறந்தவெளியில் தொழுகை நடத்திய நிலையில் பல்கலை நிர்வாகம் மீது வழக்குப்பதியப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டார்.
உத்தரப் பிரதேசத்தின் மீரட் மாவட்டத்தில் ஐஐஎம்டி தனியார் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர் காலித் பிரதான்.
இவர் ஹோலி பண்டிகையின்போது பல்கலை வளாகத்தில் சுமார் 50 மாணவர்கள் திறந்தவெளியில் தொழுகை நடத்தும் காணொளியைப் பகிர்ந்திருந்தார்.
காணொளி பரவியதைத் தொடர்ந்து, பல்கலை வளாகத்தில் தொழுகை நடத்தியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஹிந்து அமைப்புகள் போராட்டம் நடத்தின.
இதனைத் தொடர்ந்து, பல்கலைக்கழக நிர்வாகத்தால் அந்த காணொளியை எடுத்த மாணவர் பிரதான் இடைநீக்கம் செய்யப்பட்டார். மேலும், 3 பாதுகாவலர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். பல்கலை நிர்வாகம் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பல்கலை வளாகத்தில் மாணவர்கள் அனுமதியின்றி தொழுகை நடத்திய காணொளி சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து மாணவர் பிரதான் கைது செய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.