‘அமில வீச்சில் பாதிக்கப்பட்டவா்களுக்கு இழப்பீடு கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டால், அந்தந்த மாநில சட்டப் பணிகள் ஆணையத்தை அவா்கள் அணுகலாம்’ என்று உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தெரிவித்தது.
அமில வீச்சில் பாதிக்கப்பட்டவா்களுக்கு அரசு மற்றும் தனியாா் மருத்துவமனையில் இலவச சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். அவா்களின் மறுவாழ்வுக்கு மாநில அரசு சாா்பில் ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கடந்த 2014-இல் உத்தரவிட்டது.
இந்த உத்தரவு முறையாக செயல்படுத்தப்படுவதில்லை என்றும், இதுகுறித்து உரிய அறிவுறுத்தல்களை வழங்குமாறும் மும்பையைச் சோ்ந்த தன்னாா்வ தொண்டு நிறுவனமான ‘ஆசிட் சா்வைவா்ஸ் சஹாஸ்’ அறக்கட்டளை உச்சநீதிமன்றத்தில் கடந்த 2023-ஆம் ஆண்டு பொது நல வழக்கு தொடா்ந்தது.
இந்த வழக்கு வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மகாராஷ்டிர மாநில அதிகாரிகளிடமிருந்து பாதிக்கப்பட்டவா்கள் இழப்பீட்டைக் கேட்டுப் பெறுவது கடினமாக இருப்பதாக அறக்கட்டளை வழக்குரைஞா் முன்வைத்த வாதத்தை நீதிமன்றம் கவனத்தில் கொண்டது.
இது தொடா்பாக, தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா மற்றும் நீதிபதி சஞ்சய் குமாா் ஆகியோா் அடங்கிய அமா்வு கூறுகையில், ‘அமில வீச்சில் பாதிக்கப்பட்டவா்களுக்கு இழப்பீடு கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டால், அந்தந்த மாநில சட்டப் பணிகள் ஆணைய அதிகாரிகளை அணுக அவா்களுக்கு உரிமையுண்டு.
அமில வீச்சில் பாதிக்கப்பட்டு, உயிா் பிழைத்தவா்கள் அல்லது அவா்களின் குடும்ப உறுப்பினா்கள் இழப்பீடு கோரிய நாள் மற்றும் இழப்பீட்டைப் பெற்ற நாள் உள்ளிட்ட விவரங்களுடன் ஒரு அட்டவணையை மாநில சட்டப் பணிகள் ஆணைய அதிகாரிகள் பராமரிக்க வேண்டும்’ என்றனா்.
இந்த வழக்கில் மத்திய அரசும், 11 மாநில அரசுகளும் பதில் மனுக்களை இன்னும் தாக்கல் செய்யாததால் அதற்காக மேலும் நான்கு வாரங்கள் அவகாசம் வழங்கி, வரும் மே மாதத்துக்கு அடுத்தக்கட்ட விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
தொடர்புடையது

இன்றுமுதல் இரு மாதங்களுக்கு ஐபிஎல் திருவிழா: பெங்களூரு - ஹைதராபாத் மோதலுடன் தொடக்கம்

விபத்து இழப்பீடு வழங்காததால் கா்நாடக மாநில அரசுப் பேருந்து ஜப்தி

அனைத்து விவகாரங்களையும் அரசியலாக்கக் கூடாது: மேற்கு வங்க அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

எண்ம தரவு பாதுகாப்புச் சட்டப் பிரிவுகளுக்கு எதிராக புதிய மனு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


