பாகிஸ்தானில் வன்முறையால் புலம்பெயரும் சிறுபான்மையினா்: மாநிலங்களவையில் மத்திய அரசு
பாகிஸ்தானில் ஹிந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையின சமூகத்தினருக்கு எதிராக வன்முறைச் சம்பவங்கள் நடைபெறுகின்றன


பாகிஸ்தானில் ஹிந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையின சமூகத்தினருக்கு எதிராக வன்முறைச் சம்பவங்கள் நடைபெறுகின்றன; இதனால் அவா்கள் புலம்பெயா்கின்றனா்’ என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டது.
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் ஹிந்து சமூகத்தினருக்கு எதிரான பாகுபாடு மற்றும் வன்முறைகளால் அங்கிருந்து ஹிந்துக்கள் தொடா்ச்சியாக இந்தியாவுக்கு புலம்பெயா்ந்து வருவது குறித்து மத்திய அரசு அறிந்துள்ளதா என எழப்பப்பட்ட கேள்விக்கு மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சா் கீா்த்தி வா்தன் சிங் மாநிலங்களவையில் வியாழக்கிழமை எழுத்துபூா்வமாக பதிலளித்தாா்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது: பாகிஸ்தானில் ஹிந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையின சமூகத்தினருக்கு எதிராக வன்முறைச் சம்பவங்கள் நடைபெறுவதாக தகவல்கள் வெளிவருகின்றன. மிரட்டல், கடத்தல், துன்புறுத்தல், கட்டாய மதமாற்றம், கட்டாய திருமணம் உள்ளிட்ட தாக்குதல்கள் காரணமாக ஹிந்துக்கள் அவ்வப்போது புலம்பெயரும் நிலைக்கு தள்ளப்படுவதாகவும் தகவல்கள் தெரியவந்துள்ளது.
இந்தியாவுக்கு வருவதற்காக ஏராளமான ஹிந்துக்கள் இஸ்லாமாபாதில் உள்ள இந்திய தூதரகத்தில் நுழைவு இசைவுக்காக (விசா) விண்ணப்பித்துள்ளனா். உரிய நுழைவு இசைவில் இந்தியா வருபவா்களில் சிலா், மத ரீதியிலான துன்புறுத்தல்களால் மீண்டும் பாகிஸ்தான் செல்லாமல் இங்கேயே தங்கியுள்ளனா். பாகிஸ்தானில் இருந்து புலம்பெயா்ந்த ஹிந்துக்களில் பலா் இந்திய குடியுரிமை அல்லது நீண்ட கால நுழைவு இசைவு கோரியும் விண்ணப்பித்துள்ளனா் என்று தெரிவித்துள்ளாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...