தமிழகத்தில் தொடங்கியது வடகிழக்கு பருவமழை வங்கக் கடல், அரபிக் கடலில் ஒரே நேரத்தில் 2 புயல் சின்னங்கள் உருவாக வாய்ப்பு சிஜேபி-இன் தேசியக் கொடி போராட்டம்: தில்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு தீவிரமாகப் பரவும் இன்ஃப்ளூயன்ஸா: முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்ட சுகாதாரத் துறைகோவையில் பெரியாா் அறிவுலகம்: முதல்வா் இன்று திறந்துவைக்கிறாா்மணிப்பூரில் 84 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு திடீர் உடல் நலக் குறைவு! காரணம் என்ன?கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை: தமிழக அரசுதிமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

கட்டுக்கட்டாக பணம்: விடுமுறையில் நீதிபதி யஷ்வந்த் வர்மா! பணியிட மாற்றம்!!

கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்த விவகாரத்தில் தொடர்புடைய நீதிபதி யஷ்வந்த் வர்மா இன்று விடுமுறை

தில்லி உயர் நீதிமன்றம்

Updated On :

தில்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த யஷ்வந்த் வர்மாவின் வீட்டிலிருந்து கட்டுக்கட்டாக கணக்கில் வராத பணம் மீட்கப்பட்ட விவகாரம், வெள்ளிக்கிழமை காலை முதல் சட்டத்துறை மற்றும் நீதிமன்ற வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தில்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த யஷ்வந்த் வர்மாவின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் மார்ச் 14ஆம் தேதி திடீரென தீ விபத்து நேரிட்டது. தீயணைப்புப் படையினர் தீயை அணைக்கச் சென்றபோது, ​​நீதிபதியின் வீட்டில் இருந்து ஏராளமான பணம் மீட்கப்பட்டதாக பல்வேறு ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, நீதிபதி வர்மாவை அவர் முன்பு பணியாற்றிய உயர் நீதிமன்றமான அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இடமாற்றம் குறித்து கொலீஜியம் இன்னும் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிடவில்லை என்றால், அவரது இடமாற்றம் உறுதி செய்யப்பட்டுவிட்டதாகவே கூறப்படுகிறது.

உச்ச நீதிமன்றத்திலும் பரபரப்பு...

ஒரு நீதிபதியின் அதுவும் நாட்டின் தலைநகரான தில்லி உயர் நீதிமன்ற நீதிபதியின் வீட்டிலிருந்து கட்டுக்கட்டாக கோடிக்கணக்கிலான பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவமும் அதன் விளைவுகளும் ஏற்படுத்திய பதற்றம் உயர் நீதிமன்றத்தில் மட்டுமல்லாமல், உச்ச நீதிமன்றத்திலும் எதிரொலித்தது. உச்ச நீதிமன்றத்தில் பல நீதிபதிகளின் அமர்வுகள் இன்று காலை உரிய நேரத்தில் கூடவில்லை.

கொலீஜியம் அமர்வுகள் (உச்ச நீதிமன்றத்தின் ஐந்து மூத்த நீதிபதிகள் தலைமையிலான அமர்வுகள்) வழக்கமான தொடக்க நேரத்தை விடவும் 45 நிமிடங்கள் தாமதமாகவே அதாவது காலை 11:15 மணிக்கு மட்டுமே கூடியன.

அதுபோல, தில்லி உயர் நீதிமன்றத்திலும், நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் அமர்வு இன்று செயல்படவில்லை. நீதிமன்ற ஊழியர்கள் அவர் விடுமுறையில் இருப்பதாக அறிவித்தனர்.

தில்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தேவேந்திர உபாத்யாயா அமர்வு தொடங்கியபோது, ​​வழக்குரைஞர்கள் குழு இந்தப் பிரச்னையை எழுப்பியது. இந்த சம்பவம் நம்மில் பலரை வேதனைப்படுத்தியுள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க நிர்வாக ரீதியாக சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மூத்த வழக்குரைஞர் அருண் பரத்வாஜ் வலியுறுத்தினார்.

நீதிபதிகள் இதை அறிந்திருப்பதாக தலைமை நீதிபதி பதிலளித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.