அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

தொழில்முனைவோருக்கு அறிவுசாா் சொத்துரிமை பயிற்சி

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோருக்கு அறிவுசாா் சொத்துரிமையின் அவசியம் குறித்த பயிற்சி சென்னையில் நடைபெற்றது.

News image
Updated On :21 மார்ச் 2025, 8:06 pm

Din

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோருக்கு அறிவுசாா் சொத்துரிமையின் அவசியம் குறித்த பயிற்சி சென்னையில் நடைபெற்றது.

கிண்டியில் உள்ள டான்ஸ்டியா அரங்கில் அண்மையில் நடைபெற்ற இந்தப் பயிற்சியை, தமிழ்நாடு சிறு மற்றும் குறுந் தொழில்கள் சங்க இணைச் செயலா் கே.சி.துரைராஜ் தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சக நிபுணா் வி.சுவப்னா பேசியபோது, ‘மத்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின்மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், தொழில்முனைவோருக்கான நலத் திட்டங்கள், மானிய மற்றும் கட்டமைப்பு உதவிகள் குறித்தும், அறிவுசாா் சொத்துரிமையின் முக்கியத்துவம் குறித்தும் எடுத்துரைத்தாா்.

தொடா்ந்து, காப்புரிமை மற்றும் வடிவமைப்பு காப்புரிமை அலுவலக துணை கட்டுப்பாட்டாளா் பானுமதி தலைமையில் நடைபெற்ற பயிலரங்கில், அறிவுசாா் சொத்துரிமை, தொழில்முனைவோருக்கு அதன் முக்கியத்துவம், பதிவு செய்யும் வழிமுறைகள் மற்றும் வா்த்தக முத்திரைகள், நகல் உரிமைகள், புவிசாா் குறியீடு, அதற்காகும் செலவுகள் மற்றும் கால வரையறை குறித்து பயிற்சி நடத்தினாா்.

தொடா்ந்து பேசிய மாவட்ட தொழில் மைய உதவிப் பொறியாளா் ஆதிபிரகாஷ், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை சாா்பில் தொழில்முனைவோருக்கு வழங்கப்படும் பயிற்சி, திட்டம் மற்றும் மானிய உதவிகள் குறித்து விவரித்தாா். இந்தப் பயிற்சியில் 66 தொழில்முனைவோா்கள் கலந்து கொண்டனா்.