மோனலிசாவுக்கு பட வாய்ப்பு கொடுத்த இயக்குநர் கைது! பாலியல் புகாரின் பின்னணி?

மகா கும்பமேளாவில் பிரபலமடைந்த மோனலிசாவுக்கு பட வாய்ப்பு கொடுத்த இயக்குநர் சனோஜ் மிஸ்ரா பாலியல் புகாரில் கைது.
மோனலிசா / சனோஜ் மிஸ்ரா
மோனலிசா / சனோஜ் மிஸ்ராபடம் | எக்ஸ்
Published on
Updated on
2 min read

மகா கும்பமேளாவில் பிரபலமடைந்த மோனலிசா என்ற இளம்பெண்ணுக்கு பட வாய்ப்பு கொடுத்த இயக்குநர் சனோஜ் மிஸ்ரா பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தில்லி உயர்நீதிமன்றத்தில் விண்ணப்பித்திருந்த ஜாமீன் நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, காவல் துறையினர் அவரை கைது செய்தனர்.

மோனலிசாவுக்கு பட வாய்ப்பு கொடுப்பதாகக்கூறிய இயக்குநர் கைதானதால், பலரும் மோனலிசாவைத் தொடர்புப்படுத்தி கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். ஆனால், பாதிக்கப்பட்ட இளம்பெண் 28 வயது இளம் பெண் ஆவார். மோனலிசாவுக்கு 17 வயதே ஆகிறது.

பாலியல் புகாரின் பின்னணி

மும்பையில் குடும்பத்துடன் வசித்துவரும் சனோஜ் மிஸ்ரா, உத்தரப் பிரதேச மாநிலம் காஸியாபாத்தில் இருந்தபோது அவரை நபி கரீம் எல்லைக் காவல் துறையினர் நேற்று (மார்ச் 30) கைது செய்தனர்.

4 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறிய கிராமத்தைச் சேர்ந்த 28 வயது இளம்பெண் ஒருவர், சனோஜ் மீது கொடுத்த புகாரின் பெயரில் காவல் துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. மும்பையில் இருந்தபோது அவருடன் தங்கியிருக்க கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் அப்பெண் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வெவ்வேறு காலகட்டத்தில் 3 முறை கருக்கலைப்பு செய்ய கட்டாயப்படுத்தியதாகவும், திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இளம் பெண் கொடுத்த புகாரின்பேரில் மார்ச் 6 ஆம் தேதி சனோஜ் மிஸ்ரா மீது முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டது. பாலியல் வன்கொடுமை, கருக்கலைப்பு, கொலை முயற்சி மற்றும் மிரட்டல் ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை, 2025 பிப்ரவரி 18ஆம் தேதி நபி கரீம் பகுதியில் உள்ள நட்சத்திர விடுதிக்கு கட்டாயப்படுத்தி இயக்குநர் அழைத்து வந்ததைத் தொடர்ந்து இச்சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

மோனலிசாவுடன் சனோஜ் மிஸ்ரா
மோனலிசாவுடன் சனோஜ் மிஸ்ராபடம் | எக்ஸ்

பிரயாக்ராஜில் உலகின் மிகப் பெரிய ஆன்மிகத் திருவிழா என்று அறியப்படும் மகா கும்பமேளாவில், பாசிமணிகளை விற்றுவந்த மோனலிசா போஸ்லே, தனது வசீகரமான தோற்றத்தால் சமூக வலைதளங்களில் பிரபலமானார்.

மத்தியப் பிரதேசத்தின் கார்கோன் மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியான மோனலிசாவுக்கு புகழ் வெளிச்சம் விழத்தொடங்கியபோது,

அவருக்கு படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுப்பதாக இயக்குநர் சனோஜ் மிஸ்ரா அறிவித்திருந்தார். படப்பிடிப்புக்கு முன்பு அவருக்கு நடிப்புப் பயிற்சி அளிக்கும் விடியோக்களும் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க | தன்பாலின ஈர்ப்பாளராகக் கணவர்... விவாகரத்து வழக்கில் முன்னாள் குத்துச்சண்டை வீராங்கனை குற்றச்சாட்டு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com