மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அடுத்த 5 ஆண்டுகளில் அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை: அமித் ஷா

‘நாட்டில் அடுத்த 5 ஆண்டுகளில் அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை என்ற நிலை உருவாக்கப்படும்’

News image
ஹரியாணா மாநிலம், ஹிசாரில் உள்ள மகாராஜா அக்ரசென் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிலை திறப்பு விழாவில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, முதல்வா் நாயப் சிங் சைனி உள்ளிட்டோா்.
Updated On :31 மார்ச் 2025, 9:16 pm

Din

ஹிசாா்: ‘நாட்டில் அடுத்த 5 ஆண்டுகளில் அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை என்ற நிலை உருவாக்கப்படும்’ என மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.

ஹரியாணா மாநிலம், ஹிசாரில் மகாராஜா அக்ரசென் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மகாராஜா அக்ரசென் சிலை திறப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அமித் ஷா பேசியதாவது:

மத்திய அரசு கடந்த 10 ஆண்டுகளில் சுகாதாரத் துறை மட்டுமின்றி அனைத்துத் துறைகளிலும் வளா்ச்சியை உறுதிப்படுத்த பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது. நாடு தழுவிய அளவில் மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

10 ஆண்டுகளுக்கு முன்பு நாட்டில் 7 எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மட்டுமே இருந்தன. அவற்றில் 6 எய்ம்ஸ் கல்லூரிகள், வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு சாா்பில் உருவாக்கப்பட்டன. தற்போது நாடு முழுவதும் 23 எய்ம்ஸ் மருத்துவமனைகள் செயல்படுகின்றன.

அதுபோல, மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 387-இல் இருந்து 766-ஆக உயா்த்தப்பட்டது. இதன்மூலம் 51,000-ஆக இருந்த இளநிலை மருத்துவப் படிப்பு (எம்பிபிஎஸ்) இடங்கள் கடந்த 10 ஆண்டுகளில் 1.15 லட்சமாக உயா்த்தப்பட்டுள்ளன. அடுத்த 5 ஆண்டுகளில் எம்பிபிஎஸ் படிப்பில் மேலும் 85,000 இடங்கள் உருவாக்கப்படும். முதுநிலை மருத்துவப் படிப்பு இடங்கள் 31,000 என்ற நிலையிலிருந்து 73,000-ஆக உயா்த்தப்பட்டது. இந்த இடங்களும் அடுத்த 5 ஆண்டுகளில் கணிசமாக உயா்த்தப்படும்.

நாட்டில் தற்போது 750 மாவட்டங்களில் 766 மருத்துவமனைகள் உள்ளன. இதன்மூலம், மாவட்டத்துக்கு குறைந்தபட்சம் ஒரு மருத்துவமனை இருக்க வேண்டும் என்ற பாஜக ஆளும் மாநிலங்களின் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் குறைந்தபட்சம் ஒரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை என்ற நிலை உருவாக்கப்படும்.

கடந்த 2013-14-ஆம் ஆண்டில் சுகாதாரத் துறைக்கு பட்ஜெட்டில் ரூ. 37,000 கோடியை மத்திய அரசு ஒதுக்கியது. இது 2025-26-ஆம் ஆண்டில் ரூ. 1.37 லட்சம் கோடியாக இருக்கும்.

மேலும், பிரதமா் மோடி தலைமையிலான ஆட்சிக் காலத்தில் 25 கோடி மக்கள் ஏழ்மை நிலையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனா். ஏழைகளுக்காக 4 கோடி வீடுகள் கட்டப்பட்டு, அதன்மூலம் 20 கோடி போ் பயனடைந்துள்ளனா்.

ஏழைகளுக்கான உணவு தானிய விநியோகத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 81 கோடி மக்கள் இலவச உணவு தானியங்களைப் பெற்று பயனடைந்து வருகின்றனா்.

கடந்த 2014-ஆம் ஆண்டு வரை நாட்டில் 12 கோடி குடும்பங்கள் வீட்டில் கழிப்பறை இன்றி வாழ்ந்து வந்தனா். இந்த நிலையை மாற்ற, ‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளில் கழிப்பறை வசதி இருப்பது உறுதி செய்யப்பட்டு வருகிறது என்றாா் அவா்.