ரமலான் தொழுகைக்குப் பிறகு பாலஸ்தீன கொடியை ஏந்தி முழக்கம்! வைரலாகும் விடியோ!

ரமலான் சிறப்புத் தொழுகைக்குப் பிறகு பாலஸ்தீன கொடியை ஏந்தியவாறு இஸ்லாமியர்கள் முழக்கங்களை எழுப்பிய விடியோ வைரல்.
பாலஸ்தீன கொடியை ஏந்தி முழக்கம் எழுப்பும் இஸ்லாமியர்கள்
பாலஸ்தீன கொடியை ஏந்தி முழக்கம் எழுப்பும் இஸ்லாமியர்கள்படம் - எக்ஸ்
Published on
Updated on
1 min read

உத்தரப் பிரதேசத்தில் ரமலான் சிறப்புத் தொழுகைக்குப் பிறகு பாலஸ்தீன கொடியை ஏந்தியவாறு இஸ்லாமியர்கள் முழக்கங்களை எழுப்பிய விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

உத்தரப் பிரதேச மாநிலம் சஹாரன்பூர் பகுதியின் அம்பாலா சாலையிலுள்ள மசூதியில் இஸ்லாமியர்கள் பலர் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர்.

இதன் பிறகு இளைஞர்கள் சிலர் பாலஸ்தின கொடியை ஏந்தியவாறு போர் நிறுத்தம்கோரி முழக்கங்களை எழுப்பினர். இது குறித்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. பலர் இதில் கலவையான கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

இது குறித்து பேசிய நகர காவல் துறை கண்காணிப்பாளர் வ்யோம் பிந்தால்,

''இந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து காவல் துறையின் கவனத்துக்கு வந்தது. இதில் சில இளைஞர்கள் வேறொரு நாட்டின் தேசியக் கொடியை ஏந்தியவாறு முழக்கங்களை எழுப்புகின்றனர். இது குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. விசாரணைக்குப் பிறகு மேற்கொண்டு தகவல்கள் தெரிவிக்கப்படும்'' எனக் குறிப்பிட்டார்.

''அம்பாலா சாலையிலுள்ள எடிகா மசூதியில், தொழுகையில் ஈடுபட்ட பிறகு சில இளைஞர்கள் பாலஸ்தீன கொடியை ஏந்தி முழக்கங்களை எழுப்பியுள்ளனர். இந்த விடியோவை காவல் துறையினர் நீக்கியுள்ளனர். விடியோ பதிவிட்ட நபர் விரைவில் கண்டறியப்பட்டு விசாரணை நடத்தப்படும். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விடியோவில் இருப்பவர்கள் கண்டறியப்பட்டு வருகின்றனர்'' எனத் தெரிவித்தார்.

இதையும் படிக்க | மோனலிசாவுக்கு பட வாய்ப்பு கொடுத்த இயக்குநர் கைது! பாலியல் புகாரின் பின்னணி?

இதையும் படிக்க | இனி அபராதம் செலுத்தவில்லையெனில் ஓட்டுநர் உரிமம் ரத்து! புதிய விதிகள் விரைவில்..!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com