மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

இந்தியா தாக்கினால் முழு பலத்துடன் பதிலடி: பாகிஸ்தான் தூதர்

சிந்து நதி நீரோட்டத்தைச் சீர்குலைத்தால் முழு அளவிலான பலத்துடன் பாகிஸ்தான் பதிலளிக்கும் என்று பாக். தூதர் முகமது காலித் ஜமாலி தெரிவித்துள்ளார்.

News image
- ENS
Updated On :5 மே 2025, 11:27 pm

DIN

`இந்தியா தாக்குதல் நடத்தினால் அல்லது சிந்து நதி நீரோட்டத்தைச் சீர்குலைத்தால் அணு ஆயுதம் உள்பட முழு அளவிலான பலத்துடன் பாகிஸ்தான் பதிலளிக்கும்' என்று ரஷியாவுக்கான பாகிஸ்தான் தூதர் முகமது காலித் ஜமாலி தெரிவித்துள்ளார்.

ரஷியாவின் அரசு ஊடகத்துக்கு அவர் அளித்த பேட்டியில், 'இந்தியாவின் எந்தவொரு தாக்குதலுக்கும் பதிலளிக்க பாகிஸ்தான் தயாராக இருக்கிறது. இந்தியாவுக்கு எதிராக அணு ஆயுதம் உள்பட எங்களின் முழு அளவிலான பலத்தை நாங்கள் பயன்படுத்துவோம்.

சிந்து நதி நீரோட்டத்தைத் திசைதிருப்பும் அல்லது தடுக்கும் எந்தவொரு முயற்சியும் பாகிஸ்தானுக்கு எதிரான போர் நடவடிக்கையாக கருதப்பட்டு, பதிலடி கொடுக்கப்படும். அதேநேரம், இரு நாடுகளும் அணு சக்திகளாக இருப்பதால், பதற்றத்தைத் தணிக்க வேண்டிய அவசியம் நிறைய உள்ளது.

பஹல்காம் தாக்குதல் குறித்த நடுநிலையான விசாரணையில் இணைய பாகிஸ்தான் ஏற்கெனவே விருப்பம் தெரிவித்துள்ளது. சர்வதேச சமூகமும் இதில் முக்கியப் பங்கு கொண்டுள்ளது. சீனா, ரஷியா போன்ற உலக நாடுகள் இந்த விசாரணையில் பங்கேற்க முடியும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

ஜம்மு-காஷ்மீர் பிரச்னைக்கான மூலகாரணம் காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமை. இது சர்வதேச சமூகத்தால் பல்வேறு தீர்மானங்கள் மூலம் அவர்களுக்கு உறுதியளிக்கப்பட்டுள்ளது. பிராந்தியத்தின் நிலையான மற்றும் நீடித்த அமைதிக்காக இது கவனிக்கப்பட்ட வேண்டும் என்றார்.

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஏப். 23 கூடியது. சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தம், வாகா எல்லை மூடல், பாகிஸ்தானியர்களுக்கு விசா (நுழைவு இசைவு) ரத்து, பரஸ்பர தூதரக பாதுகாப்பு அதிகாரிகள் வெளியேற்றம் போன்ற முக்கிய முடிவுகள் அக்கூட்டத்தில் எடுக்கப்பட்டன.

இரு நாட்டுப் படைகளும் போர் சூழலுக்குத் தயாராகி வருவதால் எல்லையில் பதற்றம் அதிகரித்து வருகிறது. பொருளாதாரத்தில் ஏற்கெனவே பின்தங்கியுள்ள பாகிஸ்தானுக்கு இந்தியாவுடனான மோதல் பெரும் கவலையாக மாறியுள்ளது.

பாகிஸ்தான் மீண்டும் ஏவுகணை சோதனை

120 கி.மீ. தொலைவு வரை சென்று தரை இலக்கைத் தாக்கும் ஃபதா ஏவுகணையைச் செலுத்தி வெற்றிகரமாக சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான் திங்கள்கிழமை அறிவித்தது.

'சிந்து' ராணுவப் பயிற்சியின் ஒரு பகுதியாக ஏற்கெனவே 450 கி.மீ. தொலைவு வரை சென்று தாக்கும் 'அப்தாலி' ஏவுகணை சோதனையை பாகிஸ்தான் மேற்கொண்டதை பொறுப்பற்ற ஆத்திரமூட்டும் செயல்' என்று இந்தியா விமர்சித்திருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.