மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதல் அன்று பிறந்த பெண் குழந்தை! சிந்தூரி என பெயரிட்ட பெற்றோர்!

‘ஆபரேஷன் சிந்தூர்’ நடைபெற்ற நாளில் பிறந்த பெண் குழந்தைக்கு சிந்தூரி என பெயரிட்ட பெற்றோரைப் பற்றி...

News image

குழந்தையுடன் குந்தன் குமார் குடும்பத்தினர்..

Updated On :8 மே 2025, 2:50 pm

‘ஆபரேஷன் சிந்தூர்’ நடைபெற்ற நாளில் பிறந்த பெண் குழந்தைக்கு பிகாரைச் சேர்ந்த பெற்றோர் சிந்தூரி எனப் பெயரிட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு - காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்திய ஆயுதப் படைகள் புதன்கிழமை அதிகாலை பாகிஸ்தான் மற்றும் பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தின. இந்த அதிரடி தாக்குதலுக்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதல் நடைபெற்ற மே 7 ஆம் தேதி பிகாரின் கதிஹார் மாவட்டத்தில் பால்தி மகேஷ்பூர் கிராமத்தில் உள்ள மருத்துவமனையில், குந்தன் குமார் மண்டல் - சிம்பிள் தேவி என்பவர்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

பிறந்த தனது மகளுக்கு ஆபரேஷன் சிந்தூரை நினைவுகூரும் விதமாக, அவர்கள் சிந்தூரி எனப் பெயரிட்டுள்ளனர். இந்திய ராணுவத்தை கௌரவிக்கும் விதமாக இப்பெயரை சூட்டியதாக குழந்தையின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து குந்தன் குமார் கூறுகையில், “எனது மகள் மே 7 ஆம் தேதி காலை 9 மணியளவில் பிறந்தாள். பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றியும், எங்கள் மகள் பிறந்ததும், இரண்டும் எங்கள் குடும்பத்திற்கு பெருமை சேர்க்கும் விஷயம்.

அதனாலேயே இந்திய ராணுவத்தை கௌரவிக்கும் விதமாக அவளுக்கு சிந்தூரி எனப் பெயரிட்டுள்ளோம். சிந்தூரி வளர்ந்ததும், அவள் இந்திய ராணுவத்தில் சேருவாள். இந்தப் பெயரால் எனது குடும்பத்தில் உள்ள அனைவரும் மகிழ்ச்சியடைந்துள்ளார்” என்றார்.

இந்தியா மீதான தேசபக்தியில் தனது மகளுக்கு சிந்தூரி எனப் பெயரிட்டப் பெற்றோருக்கு பல்வேறு தரப்பினரும் சமூக வலைதளம் மூலமாக வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்திய பெற்றோர்கள் நீண்ட காலமாக தங்கள் குழந்தைகளுக்கு தனித்துவமான, நிகழ்வு சார்ந்த பெயர்களை வைப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். கரோனா தொற்றுநோய் காலத்தில், சத்தீஸ்கரில் ஒரு தம்பதி தங்கள் இரட்டை குழந்தைகளுக்கு கொரோனா மற்றும் கோவிட் என்று பெயரிட்டனர்.

அதே நேரத்தில் மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஒரு குடும்பத்தினர் தங்களுக்குப் பிறந்த ஆண் குழந்தைக்கு லாக் டவுன் யாதவ் என்று பெயரிட்டதும் நினைவுகூரத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.