சிஜேபி பேரணி: எஃப்.ஐ.ஆர்-ல் கொலை முயற்சி உள்பட 13 குற்றச்சாட்டுகள் சோ்ப்பு10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்: 4 மணி நேரத்தில் விநியோகம்!கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்ட அறிக்கைக்கு டெண்டர்!தாம்பரம் - தென்காசி இடையே ஜூலை 30 முதல் 6 சிறப்பு ரயில்கள்வினாத்தாள் முறைகேடு! 10 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்! சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்! சா்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்குரைஞா் பதவிநீக்கம்!
/

போர் விமானங்களைப் பயன்படுத்திய பாகிஸ்தான்: கர்னல் சோஃபியா குரேஷி

போர் விமானங்களைப் பயன்படுத்தி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதாக கர்னல் சோஃபியா குரேஷி விளக்கம்

News image

பயங்கரவாத தளங்கள்

Updated On :10 மே 2025, 11:25 am IST

புது தில்லி: போர் விமானங்களையும் தாக்குதலுக்குப் பயன்படுத்தியது பாகிஸ்தான். ஆனால், பாகிஸ்தான் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் அளவோடு பதிலடி கொடுத்து வருகிறது என்று இந்திய ராணுவ கர்னல் சோஃபியா குரேஷி விளக்கம் கொடுத்துள்ளார்.

இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் தாக்குதல் தொடர்பாக வெளியுறவுத் துறைச் செயலர் விக்ரம் மிஸ்ரி, இந்திய ராணுவ கர்னல் சோஃபியா குரேஷி, விமானப் படை விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் செய்தியாளர்களிடம் விவரித்தனர்.

அப்போது பேசிய இந்திய ராணுவ கர்னல் சோஃபியா குரேஷி, இந்தியாவை தேவையில்லாமல் சீண்டுகிறது பாகிஸ்தான். பாகிஸ்தான் தாக்குதல்களை இந்தியா தக்க முறையில் முறியடித்துள்ளது. எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.

எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதிகளில் 26 இடங்களில், ட்ரோன்கள், உயர் ரக ஆயுதங்களை பயன்படுத்தி பாகிஸ்தான் தாக்க முயன்றது. இந்திய விமானப்படை தளங்களை தாக்கும் பாகிஸ்தான் ராணுவத்தின் அனைத்து முயற்சிகளும் முறியடிக்கப்பட்டன. அதிவேக ஏவுகணைகளால் பஞ்சாப் விமானப்படை தளங்களை பாகிஸ்தான் தாக்க முயற்சித்துள்ளது. இந்தியா தரப்பில் பாலிஸ்டிக் ஏவுகணைகளைப் பயன்படுத்தி பதில் தாக்குதல் கொடுக்கப்பட்டுளள்து என்று விளக்கம் கொடுத்துள்ளார்.

மேலும், பாகிஸ்தானின் ஆயுதங்களை இந்தியா தாக்கிய காணொலியை வெளியிட்டார் குரேஷி.

விமானப் படை விங் கமாண்டர் வியோமிகா சிங் கூறுகையில், இந்தியாவின் எஸ் 400 வான் பாதுகாப்பு அமைப்பு தாக்கப்பட்டதாக வதந்தி பரவி வருகிறது. தவறான தகவலை யாரும் நம்ப வேண்டாம். பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் நடவடிக்கையில் பாகிஸ்தான் ஈடுபட்டு வருகிறது.

ஜம்மு - காஷ்மீரின் எல்லைப் பகுதிகளான பாரமுல்லா, பூஞ்ச், ரஜௌரி, அக்னூர் பகுதிகளில் பாகிஸ்தான் பீரங்கி மூலம் தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் தாக்குதல்களை இந்தியா முறியடித்துள்ளது. டிரோன்கள் மற்றும் வெடிபொருள்களைக் கொண்டும் தாக்குதலை மேற்கொண்டது பாகிஸ்தான். இரு தரப்பிலும் கடுமையான மோதல் ஏற்பட்டு தொடர்ந்து வருகிறது. பாகிஸ்தான் ஆயுதக் கிடங்குகளைத் தாக்கி கணிசமான சேதத்தை இந்தியா ஏற்படுத்தியிருக்கிறது.

இந்திய விமானப் படைத் தளத்தின் அருகே உள்ள மருத்துவமனைகளை பாகிஸ்தான் தாக்கியது.

மக்கள் வசிக்கும் பகுதியை ட்ரோன்கள் மற்றும் ஆயுதங்கள் மூலம் பாகிஸ்தான் தாக்கியது. அனைத்து முயற்சிகளும் முறியடிக்கப்பட்டன என்று விளக்கம் கொடுத்தார் வியோமிகா சிங்.

விமானப் படைத் தளங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று, இன்று எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் வியோமிகா சிங் காட்டினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.