ஒரு தேர்வு ஒருபோதும் உங்களை வரையறை செய்யாது: பிரதமர் மோடி!

உங்களின் பலம் மதிப்பெண் பட்டியலைத் தாண்டி செல்லக்கூடியது.
பிரதமர் மோடி
பிரதமர் மோடி
Published on
Updated on
1 min read

புது தில்லி: நாடு முழுவதும் 10, 12ஆம் வகுப்புகளில் தேர்ச்சி பெற்ற லட்சக்கணக்கான மாணவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்(சிபிஎஸ்இ) பிளஸ் 2 தேர்வு முடிவுகளை காலை 11.30 மணியளவிலும், பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் 1.30 மணியளவிலும் வெளியிடப்பட்டன.

இந்த ஆண்டு, பத்தாம் வகுப்புத் தேர்வுகளில் 93.66 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர், அதேநேரத்தில் 12 ஆம் வகுப்புக்கான தேர்ச்சி சதவீதம் 88.39 சதவீதமாகும். இது கடந்த ஆண்டை விட 0.41 சதவீதம் அதாவது சிறிதளவு முன்னேற்றத்தைக் காட்டுகிறது.

10 ஆம் வகுப்புத் தேர்வு 26,675 ஒருங்கிணைந்த பள்ளிகளில் 7,837 மையங்களில் நடத்தப்பட்ட நிலையில் 23 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் தேர்வெழுதினர். இந்த ஆண்டு வாரிய தேர்வுகள் எழுதிய மாணவர்களின் மொத்த எண்ணிக்கை 42 லட்சத்தைத் தாண்டியது. 10ஆம் வகுப்புத் தேர்வுகள் மார்ச் 18 ஆம் தேதி முடிவடைந்த நிலையில், 12 ஆம் வகுப்புத் தேர்வுகள் ஏப்ரல் 4 ஆம் தேதி முடிவடைந்தன.

இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில்,

சிபிஎஸ்இ 10,12ம் வகுப்பு தேர்வெழுதிய அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். இது உங்கள் உறுதிப்பாடு, ஒழுக்கம், கடின உழைப்புக்குக் கிடைத்த வெற்றி. பெற்றோர்கள், ஆசிரியர்களின் பங்களிப்புகளையும் அவர் பாராட்டினார்,

மேலும், பெற்றோர்கள், ஆசிரியர்கள் இந்த சாதனைக்குப் பங்களித்த அனைவரின் பங்களிப்பையும் இன்று அங்கீகரிக்கும் ஒருநாள். மாணவர்கள் இனி வரவிருக்கும் அனைத்து தேர்வுகளிலும் சிறப்பாக வெற்றியடைய வாழ்த்துகிறேன்.

அதேசமயம் தேர்வுகளில் தங்கள் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யாத மாணவர்களுக்குப் பிரதமர் மோடி அறிவுரையைக் கூறியுள்ளார்.

மாணவர்கள் தங்கள் மதிப்பெண்களால் மனச்சோர்வடைந்தவர்களுக்கு நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன். ஒரு தேர்வு முடிவால் உங்களை ஒருபோதும் வரையறுக்க முடியாது. உங்கள் பயணம் மிகப்பெரியது. உங்களின் பலம் மதிப்பெண் பட்டியலைத் தாண்டி செல்லக்கூடியது. நம்பிக்கையுடன் இருங்கள், ஆர்வமாக இருங்கள், ஏனென்றால் பெரிய விஷயங்கள் காத்திருக்கின்றன என்று அவர் கூறினார்.

10, 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளில் வழக்கமாக மாணவிகளே இந்தாண்டும் மாணவர்களை விடச் சிறப்பாகத் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாணவர்கள் தங்கள் முடிவுகளை cbse.gov.in, cbseresults.nic.in, மற்றும் results.cbse.nic.in ஆகிய அதிகாரப்பூர்வ வலைத்தளங்களில் தெரிந்துகொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com