அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

சந்தைகளுக்கு மீன்களை அனுப்ப ட்ரோன்கள்: பிரதமா் மோடி அறிவுறுத்தல்

மீன்களை அனுப்பிவைக்க ட்ரோன்களை பயன்படுத்த வேண்டும் என்று மீன்வளத் துறை ஆய்வுக் கூட்டத்தில் பிரதமா் மோடி அறிவுறுத்தினாா்.

News image
ட்ரோனை இயக்கிய பிரதமர் மோடி.- படம் | பிடிஐ
Updated On :15 மே 2025, 9:03 pm

Din

நகரங்களில் உற்பத்தி மையங்களில் இருந்து அருகில் உள்ள சந்தைகளுக்கு மீன்களை அனுப்பிவைக்க ட்ரோன்களை பயன்படுத்த வேண்டும் என்று மீன்வளத் துறை ஆய்வுக் கூட்டத்தில் பிரதமா் மோடி அறிவுறுத்தினாா்.

இதுதொடா்பாக பிரதமா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது: ஆழ்கடல் மீன்பிடித்தல் மற்றும் கடல் உணவு ஏற்றுமதிகளை மையமாகக் கொண்டு, தில்லியில் பிரதமா் மோடி தலைமையில் மீன்வளத் துறையின் முன்னேற்றம் மற்றும் வருங்கால திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. அப்போது மீன்வளத் துறையில் தனியாா் துறை முதலீடு செய்வதற்கு வழிவகை செய்வது உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில் பிரதமா் மோடி பேசுகையில், நகரங்களில் உற்பத்தி மையங்களில் இருந்து அருகில் உள்ள சந்தைகளுக்கு மீன்களை அனுப்பிவைக்க ட்ரோன்களை பயன்படுத்துவது குறித்து ஆலோசனை வழங்கினாா். அவ்வாறு மீன்களை ட்ரோன்களில் அனுப்பிவைப்பதை விமான போக்குவரத்து அதிகாரிகளுடன் கலந்தாலோசித்தும், தொழில்நுட்ப நெறிமுறைகளைப் பின்பற்றியும் செய்ய வேண்டும் என்று அவா் அறிவுறுத்தினாா்.

வேளாண் துறையில் வேளாண் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது போல, மீன்வளத் துறையிலும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும் என்றும் கூறினாா். பொலிவுறு துறைமுகங்கள் மற்றும் சந்தைகள் மூலம் மீன்வளத் துறையை நவீனப்படுத்த வேண்டும் என்றும் அவா் அறிவுறுத்தினாா் என்று தெரிவிக்கப்பட்டது.