தில்லி வணிகக் கல்லூரி நூலகத்தில் தீ!

தில்லியிலுள்ள கல்லூரியின் நூலகத்தில் தீ விபத்து ஏற்பட்டதைப் பற்றி...
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

புது தில்லியிலுள்ள வணிகக் கல்லூரியின் நூலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏராளமான புத்தகங்கள் எரிந்து நாசமாகியுள்ளன.

வடமேற்கு தில்லியின் பிதம்பூரா பகுதியிலுள்ள குரு கோவிந்த் சிங் வணிகவியல் கல்லூரியின் நூலகத்தில், இன்று (மே 15) காலை 8.55 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

நான்கு தளங்களைக் கொண்ட அந்த நூலகத்தின் முதல் மூன்று தளங்களில் தீ பரவியதால், தீயணைப்புப் படையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

அந்தத் தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற தீயணைப்புப் படையினர் 11 தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் அந்தத் தீயை அனைக்கப் போராடியுள்ளனர். சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலான போராட்டத்திற்கு பிறகு காலை 9.40 மணியளவில் அங்குப் பரவிய தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தத் தீ விபத்துக்கான காரணம் மற்றும் அதனால் ஏற்பட்ட பொருள் சேதங்கள் குறித்த முழுமையானத் தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

இதையும் படிக்க: ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு ஜம்மு-காஷ்மீர் செல்கிறார் ராஜ்நாத் சிங்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com