இலங்கையில் முன்னாள் அதிபரின் உதவியாளர் வாகனம் மீது துப்பாக்கிச்சூடு

இலங்கையில் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் உதவியாளர் வாகனம் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

இலங்கையில் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் உதவியாளர் வாகனம் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் ரணில் விக்ரமசிங்க அதிபராக இருந்தபோது அவருடைய மக்கள் தொடர்பு இயக்குநராக பணியாற்றியவர் துசிதா ஹல்லோலுவா. இவர் தனது வழக்கறிஞருடன் வாகனத்தில் சனிக்கிழமை இரவு கொழும்பின் புறநகர்ப் பகுதியான நாரஹென்பிடவுக்கு சென்றிருக்கிறார்.

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் வழி மறித்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். தொடர்ந்து ஹல்லோலுவா மற்றும் அவருடன் வந்த நபர்களை தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இருப்பினும் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

மூன்றாண்டு காலப் போரில் பெரியளவிலான ட்ரோன் தாக்குதல் நடத்திய ரஷியா!

துப்பாக்கிச் சூட்டில் வாகனம் சேதமடைந்தது. மேலும் மர்ம நபர்கள் ஹல்லோலுவா வசம் இருந்த ரகசிய கோப்பு ஒன்றையும் திருடிச் சென்றனர். இதுகுறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இச்சம்பவம் இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில் அதிபர் அநுர குமார திசநாயகவுக்கு எதிராக அவதூறான அறிக்கை விவகாரத்தில் ஹல்லுவாவை சிஐடி விசாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com