மே 29ல் சிக்கிம் செல்கிறார் பிரதமர் மோடி?

சிக்கிம் மாநில அந்தஸ்து பெற்றதன் 50வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக..
பிரதமர் மோடி...
பிரதமர் மோடி...
Published on
Updated on
1 min read

சிக்கிம் மாநில அந்தஸ்து பெற்றதன் 50வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி மே 29 அன்று சிக்கிம் செல்ல வாய்ப்புள்ளதாக முதல்வர் பிரேம் சிங் தமாங் தெரிவித்தார்.

பிரதமர் மோடியின் வருகை குறித்து பிரதமர் அலுவலகத்திலிருந்து உறுதியான தகவல் இன்னும் வெளியாகவில்லை. ஆனால் அவர் வருகைக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

பிரதமர் மோடியை வரவேற்க பால்ஜோர் மைதானத்தில் சுமார் 1 லட்சம் பேர் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, மனன் கேந்திராவில் நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டிருந்தோம், ஆனால் அந்த இடத்தில் பெரியளவிலான கூட்டம் கூட முடியாது என்பதால், பிரதமர் வருகையின் இடத்தை மாற்றியமைத்ததாக ஞாயிற்றுக்கிழமை ஒரு நிகழ்ச்சியின் போது தமாங் செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் மக்களை வாழ்த்துவதற்காகப் பிரதமர் முழு மனதுடன் மாநிலத்திற்கு வருகை தர விரும்புகிறார். இது மாநிலத்திற்கும் நாட்டிற்கும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சந்தர்ப்பம், அதனால் பிரதமர் நிச்சயம் வருகை தருவார் என்று அவர் கூறினார்.

பிரதமரின் உறுதியான வருகைக்கான ஏற்பாடுகளை மறு ஆய்வு செய்ய சனிக்கிழமை உயர்நிலைக் கூட்டம் நடைபெற்றது. இதற்குத் தலைமை நிர்வாகி, அமைச்சரவை செயலாளர் வி.பி. பதக் தலைமைச் செயலாளர் ஆர். தெலாங் தலைமை தாங்கினார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிரதமரின் வருகைக்கான நிமிட விவரங்கள், பாதுகாப்பு அம்சங்கள் உள்பட இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

பிரதமரின் வருகையின்போது நடைபெறும் கலாசார நிகழ்ச்சிகள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது, மேலும் திறப்பு விழா மற்றும் அடிக்கல் நாட்டுவதற்கான திட்டங்களின் பட்டியலை இறுதி செய்ததாக அவர்கள் மேலும் தெரிவித்தனர். பல்வேறு துறைகளின் தலைவர்கள், மாநில அரசின் மூத்த அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

1947ஆம் ஆண்டு நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, பொது வாக்கெடுப்பைத் தொடர்ந்து மே 16, 1975 அன்று இந்திய மாநிலமாக மாறியது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com