இம்ரான் கானுக்கு உயர் சிகிச்சை: கபில்தேவ் உள்ளிட்ட சர்வதேச முன்னாள் கேப்டன்கள் கடிதம்!மகாராஷ்டிரம்: ஏரிக்கு அருகே ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கம்! இந்திய வீரர் கரண் சர்மா அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு! ஜார்க்கண்ட் போராட்டம்: 900 பேர் மீது வழக்குப்பதிவு!சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு! 2ஆவது டெஸ்ட்: வங்கதேசத்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா பதிலடி

ஆந்திரம்: ரேஷன் பொருள் நேரடி விநியோகம் ஜூன் 1 முதல் ரத்து

ஆந்திரத்தில் வீடுதோறும் ரேஷன் பொருள்கள் நேரடியாக விநியோகம் செய்யப்படும் நடைமுறை ஜூன் 1-ஆம் தேதிமுதல் நிறுத்தப்பட உள்ளது.

சந்திரபாபு நாயுடு - கோப்புப் படம்

Published On :22 மே 2025, 1:45 am IST

ஆந்திரத்தில் வீடுதோறும் ரேஷன் பொருள்கள் நேரடியாக விநியோகம் செய்யப்படும் நடைமுறை ஜூன் 1-ஆம் தேதிமுதல் நிறுத்தப்பட உள்ளது.

இதுதொடா்பாக மாநில உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சா் என்.மனோகா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘ஆந்திரத்தில் வீடுதோறும் ரேஷன் பொருள்களை நேரடியாக விநியோகிக்கும் நடைமுறையை ஜூன் 1 முதல் நிறுத்த மாநில அமைச்சரவை செவ்வாய்க்கிழமை முடிவு செய்தது.

இந்த நடைமுறையில் நிகழும் குளறுபடிகள் காரணமாக மீண்டும் நியாய விலைக் கடைகள் மூலம், பொருள்களை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

எனினும், 65 வயதுக்கு மேற்பட்டவா்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும் நேரடியாக வீட்டிற்கு ரேஷன் பொருள்களை விநியோகிக்கும் நடைமுறை தொடரும்’ என்று தெரிவிக்கப்பட்டது.

ஆந்திரத்தில் முன்னாள் முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் ஆட்சியில் வீடுதோறும் ரேஷன் பொருள்களை நேரடியாக விநியோகம் செய்யும் நடைமுறை தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.