மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்: மத்திய அமைச்சா் அதவாலே தகவல்எழும்பூா் ரயில் நிலைய மறுசீரமைப்பு: ரயில் சேவைகளில் மாற்றம்தேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!தமிழ்நாட்டை ஆளும் கட்சியாக விசிக மாறும்! மாநாட்டில் திருமாவளவன் பேச்சுவிசிகவும் தவெகவும் இனி இணைந்தே பயணிக்கும்: திருமாவளவன்சுதந்திர நாளன்று மிகப்பெரிய சதி முறியடிப்பு! ஐஎஸ்ஐ தொடர்புடைய 253 பயங்கரவாதிகள் கைது! ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!
/

மும்பைக்கு ஆரஞ்சு எச்சரிக்கை: போக்குவரத்து முடங்கியது!

மும்பைக்கு கனமழை பெய்து வருவது பற்றி...

News image

போக்குவரத்து நெரிசலில் சிக்கிய வாகனங்கள். - PTI

Updated On :26 மே 2025, 12:58 pm IST

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் இன்று காலைமுதல் பெய்து வரும் கனமழையால் சாலைகளில் நீர் தேங்கி போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், தண்டவாளங்களில் நீர் தேங்கியதால் ரயில் சேவையும், மோசமான வானிலை காரணமாக 200-க்கும் மேற்பட்ட விமான சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளது.

கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியிருக்கும் நிலையில், அம்மாநிலத்தில் 11 மாவட்டங்களுக்கு இன்று சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, மும்பை, தாணே உள்ளிட்ட மகாராஷ்டிர மாநிலங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், காலைமுதல் பெய்த கனமழை காரணமாக ஆரஞ்சு எச்சரிக்கையாக மாற்றப்பட்டுள்ளது.

மும்பை, தாணே, ராய்காட் மாவட்டங்களுக்கு மிககனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை வானிலை மையம் விடுவித்ததை தொடர்ந்து, பேரிடர் மேலாண்மை அதிகாரிகளுடன் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

இன்று காலை 9 மணிமுதல் 10 வரையிலான ஒரு மணிநேரத்தில் மட்டும் மும்பையின் நரிமன் பாயிண்ட் பகுதியில் 104 மி.மீ. மழை கொட்டித் தீர்த்துள்ளது.

பல்வேறு சாலைகளிலும் தாழ்வான பகுதிகளில் உள்ள தண்டவாளங்களிலும் மழை நீர் தேங்கியதால் இன்று காலை அலுவலகத்துக்கு சென்றோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

மேலும், மும்பை பகுதியில் அடுத்த 24 மணிநேரத்துக்கு 40 கி.மீ. வரை காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளதால் மாநகராட்சி அதிகாரிகள் உஷார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.