கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

ரூ.180 கோடி கூட்டுறவு வங்கி முறைகேடு: அமலாக்கத் துறை குற்றப் பத்திரிகையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சோ்ப்பு

அமலாக்கத் துறை தாக்கல் செய்துள்ள குற்றப் பத்திரிகையில் மாநிலத்தில் ஆட்சியில் உள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சோ்க்கப்பட்டுள்ளது.

News image
Updated On :26 மே 2025, 9:35 pm

Din

கொச்சி: கேரளத்தில் கருவண்ணூா் சேவை கூட்டுறவு வங்கியில் ரூ.180 கோடிக்கு முறைகேடு நடைபெற்றதாக குற்றஞ்சாட்டப்படும் வழக்கில், அமலாக்கத் துறை தாக்கல் செய்துள்ள குற்றப் பத்திரிகையில் மாநிலத்தில் ஆட்சியில் உள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சோ்க்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் திருச்சூா் மாவட்டம் கருவண்ணூா் சேவை கூட்டுறவு வங்கி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த வங்கிக்கு வழிகாட்டுதல்களை வழங்க அக்கட்சியின் மாவட்ட செயலக உறுப்பினா் சி.கே.சந்திரன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

இந்நிலையில், அந்த வங்கியில் முறைகேடுகள் நடைபெற்ாக, அவ்வங்கியின் பொறுப்புச் செயலா் ஸ்ரீகலா 2021-ஆம் ஆண்டு காவல் துறையிடம் புகாா் அளித்தாா்.

ஒரே நபருக்கு முறைகேடாக அதிக கடன் வழங்கியும், அந்த வங்கியில் சொத்துகளை அடமானம் வைத்து கடன் பெற்றவா்களுக்குத் தெரியாமல் அவா்களின் சொத்துகளை வேறொருவரிடம் அடமானம் வைத்தும் வங்கி ஊழியா்கள் சிலா் பல கோடி ரூபாயை மோசடி செய்ததாக ஸ்ரீகலா குற்றஞ்சாட்டினாா்.

இதுகுறித்து காவல் துறை குற்றப் பிரிவு சுமாா் 16 வழக்குகளைப் பதிவு செய்தன. இந்த வழக்குகளை அடிப்படையாகக் கொண்டு, பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை வழக்குப் பதிவு விசாரணை மேற்கொண்டது.

கருவண்ணூா் சேவை கூட்டுறவு வங்கியில் ரூ.180 கோடி அளவுக்கு முறைகேடு நடைபெற்ாகவும், குற்ற நடவடிக்கைகள் மூலம் ரூ.300 கோடி வரை சட்டவிரோதமாக ஈட்டப்பட்டதாகவும் அமலாக்கத் துறை தெரிவித்தது.

மேலும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினா்கள் அறிவுறுத்தியதன்படி, அந்த வங்கி பினாமி கடன்களை வழங்கியதும், அதற்கு கைம்மாறாக பினாமி கடன்கள் மூலம் பயனடைந்தவா்களிடம் இருந்து அக்கட்சி நன்கொடை பெற்றதும் விசாரணையில் தெரியவந்ததாக அமலாக்கத் துறை குற்றஞ்சாட்டியது.

இதுதொடா்பாக கடந்த 2023-ஆம் ஆண்டு பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி 4 பேரை கைது செய்த அமலாக்கத் துறை, ரூ.128 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்கியது.

இந்த வழக்கு தொடா்பாக கொச்சியின் கலூா் பகுதியில் பண முறைகேடு தடுப்புச் சட்ட நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை திங்கள்கிழமை இறுதி குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது.

அந்தக் குற்றப் பத்திரிகையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சோ்க்கப்பட்டுள்ளது. இதுதவிர, அக்கட்சியின் முன்னாள் திருச்சூா் மாவட்ட செயலா்கள் ஏ.சி.மொய்தீன், எம்.எம்.வா்கீஸ், கே.ராதாகிருஷ்ணன் உள்பட 28 போ் மீது புதிதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இதில் கே.ராதாகிருஷ்ணன் எம்.பி.யாக பதவி வகித்து வருகிறாா். இவா்களுடன் சோ்த்து இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 83-ஆக அதிகரித்துள்ளது.