கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மே 29 - 30 சிக்கிம், மேற்கு வங்கம், பிகார், உ.பி., செல்லும் மோடி! நிகழ்ச்சி நிரல்கள் என்னென்ன?

நான்கு மாநிலங்களில் ரூ. 69 ஆயிரம் கோடி மதிப்புடைய திட்டங்களைத் தொடக்கிவைக்கவுள்ளார்.

News image
நரேந்திர மோடி- கோப்புப் படம்
Updated On :28 மே 2025, 1:48 pm

இணையதளச் செய்திப் பிரிவு

பிரதமர் நரேந்திர மோடி மே 29, 30 அகிய தேதிகளில் சிக்கிம், மேற்கு வங்கம், பிகார், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 4 மாநிலங்களுக்குச் செல்லவுள்ளார்.

இரு நாள்களில் நான்கு மாநிலங்களுக்குச் சென்று பல்வேறு திட்டங்களைத் தொடக்கிவைக்கவுள்ளதால், திட்டமிடப்பட்டுள்ள நிகழ்ச்சி நிரல்கள் குறித்து காணலாம்.

சிக்கிம்

இரு நாள்கள் பயணமாக சிக்கிம் செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, சிக்கிம் உருவாகி 50 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியில் காலை 11 மணிக்கு பங்கேற்கிறார்.

அங்கு பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி சிலத் திட்டங்களைத் தொடக்கிவைக்கிறார். நம்சி மாவட்டத்தில், ரூ. 750 கோடி மதிப்பில் 500 படுக்கை கொண்ட மாவட்ட அரசு மருத்துவமனை, சங்கச்சோலிங் பகுதியில் பயணிகள் ரோப் வழி, காங்டாக் மாவட்டத்திலுள்ள சங்கோலா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அடல் பிஹாரி வாஜபேயி சிலை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் இதில் அடக்கம்.

மேற்கு வங்கம்

இதேநாள் (மே 29) பிற்பாதியில் மேற்கு வங்கத்திற்கு பிரதமர் மோடி பயணிக்கவுள்ளார். அங்கு அலிபுர்தூர் மற்றும் குச் பிகார் மாவட்டங்களில் நகர எரிவாயு விநியோகத் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

பிகார்

பின்னர் 2.15 மணிக்கு மேற்கு வங்கத்திலிருந்து பிகாருக்குச் செல்கிறார். அங்கு மாலை 5.45 மணியளவில் பாட்னா விமான நிலையத்தில் கட்டப்பட்டுள்ள புதிய முனையக் கட்டடத்தை திறந்து வைக்கிறார். ஒரு கோடி பயணிகள் வந்து செல்லும் வகையில் ரூ. 1200 கோடி மதிப்பில் இந்தக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. பிஹ்தா விமான நிலையத்தில் பயணிகள் வசதிக்காக ரூ. 1410 கோடி மதிப்பிலான திட்டத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார். பாட்னாவிலுள்ள ஐஐடி மற்றும் என்ஐடிக்கு அருகில் பிஹ்தா பகுதி உள்ளதால் கல்வியியல் மையமாகத் திகழ்கிறது.

மே 30 ஆம் தேதி காலை 11 மணியளவில் பிகார் மாநிலம் கராகட் பகுதியில் ரூ. 48,520 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களைத் தொடக்கிவைத்து அடிக்கல் நாட்டுகிறார். இதனைத் தொடர்ந்து பொதுக்கூட்டத்திலும் பங்கேற்று உரையாற்றவுள்ளார்.

ஒளரங்காபாத் மாவட்டத்தில் உள்ள நபிநகர் சூப்பர் அனல் மின் நிலையத்தின் இரண்டாம் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார். இங்கு 3x800 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெறவுள்ளது. இதன்மதிப்பு ரூ. 29,930 கோடி. இது பிகார் மற்றும் கிழக்கு மாநிலங்களின் மின்சாரத் தேவையை பூர்த்தி செய்யும். தொழில் துறை வளர்ச்சிக்கும் வித்திடும். வேலைவாய்ப்புகள் அதிகரிக்க வழிவகுக்கும்.

பாட்னா - அர்ராஹ் - சசாரம் பகுதிகளிடையே பல்வேறு சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். வாரணாசி - ராஞ்சி - கொல்கத்தா இடையிலான 6 வழிச் சாலைத் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார். பாட்னா - கயா - தோபி இடையே நான்கு வழிச் சாலைக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

சோன் நகர் - முகம்மது கஞ்ச் இடையே ரூ. 1330 கோடி மதிப்பிலான ரயில்வே பாதை திட்டத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

உத்தரப் பிரதேசம்

இதனைத் தொடர்ந்து பிற்பகல் 2.45 மணிக்கு உத்தரப் பிரதேசம் செல்லும் பிரதமர் மோடி, ரூ. 20,900 கோடி மதிப்பிலான திட்டத்தை தொடக்கி வைத்து, சில திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவுள்ளார். அங்கு பொதுமக்கள் மத்தியில் உரையாற்றுகிறார்.

கெளதம புத்தா நகரில் யமுனா தொழில் துறை மேம்பாட்டு ஆணையத்தில் 220 கிலோ வாட் துணை மின் நிலைய கட்டுமானத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார். நொய்டாவில் ரூ. 320 கோடி மதிப்பிலான துணை மின் நிலையத்தை தொடக்கி வைக்கிறார்.

கான்பூரில் ரூ. 8300 கோடி மதிப்பிலான பான்கி அனல் மின் நிலைய விரிவாக்கத் திட்டத்தை தொடக்கி வைக்கிறார். ரூ. 9330 கோடி மதிப்பில் 660 மெகா வாட் திறன் கொண்ட கெளதம்பூர் அனல் மின் நிலையத் திட்டத்தையும் தொடக்கி வைக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.