திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

என்கவுன்டரில் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலின் ஷூட்டர் கொலை!

லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலின் ஷூட்டர் என்கவுன்டர் செய்யப்பட்டது பற்றி...

News image
உள்படம்: என்கவுன்டர் செய்யப்பட்ட நவீன் குமார்
Updated On :29 மே 2025, 7:38 am

DIN

உத்தரப் பிரதேசத்தில் காலிஸ்தான் பயங்கரவாதி லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்த ஷூட்டரை காவல்துறையினர் வியாழக்கிழமை என்கவுன்டர் செய்துள்ளனர்.

உத்தரப் பிரதேச சிறப்பு காவல் படை மற்றும் தில்லி போலீஸ் இணைந்து நடத்திய என்கவுன்டரில் கொல்லப்பட்ட லாரன்ஸ் குழுவைச் சேர்ந்த நவீன் குமார் என்பவர், கொலை உள்பட பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்தவர் என்று காவல்துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஹாபூர் கோட்வாலி பகுதியில் புதன்கிழமை இரவு சட்டவிரோத கும்பலைத் தேடிச் சென்ற சிறப்புப் படையைச் சேர்ந்த காவலர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

தொடர்ந்து காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நவீன் குமார் என்ற குற்றவாளி படுகாயமடைந்தார். அவரை மீட்டு மருத்துவமனைக்கு காவல்துறையினர் அழைத்துச் சென்ற நிலையில், அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.

உயிரிழந்த நவீன் குமார், காஜியாபாத் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும், தற்போது லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலுக்கு ஷூட்டராக பணிபுரிந்து வருபவர் என்பதும் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவர் கொலை, கொள்ளை, கடத்தல் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட வழக்குகளில் உத்தரப் பிரதேசம் மற்றும் தில்லி காவல்துறையால் தேடப்பட்டு வந்தவர்.

பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்தியது, மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் பாபா சித்திகியை கொலை செய்தது உள்ளிட்ட சம்பவத்துக்கு காலிஸ்தான் பயங்கரவாதியான லாரன்ஸ் பிஷ்னோய் குழு பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.