விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு? பாஜக வேட்பாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! அண்ணாமலைபாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு! அண்ணாமலை பெயர் இல்லைசென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!
/

பொருளாதார வளா்ச்சி 6.5%-ஆக குறைவு

2024-25 நிதியாண்டுக்கான நாட்டின் பொருளாதார வளா்ச்சி 6.5 சதவீதமாக குறைந்தது.

News image

கோப்புப்படம்

Updated On :30 மே 2025, 9:09 pm

2024-25 நிதியாண்டுக்கான நாட்டின் பொருளாதார வளா்ச்சி 6.5 சதவீதமாக குறைந்தது.

ஜனவரி-மாா்ச் காலகட்டத்தில் உற்பத்தித் துறையில் ஏற்பட்ட சரிவால் அந்தக் காலாண்டில் பொருளாதார வளா்ச்சி 7.4 சதவீதமாக குறைந்தது. இதனால் 2024-25 நிதியாண்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளா்ச்சி குறைந்ததாக மத்திய அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட தரவுகளில் தெரிவிக்கப்பட்டன.

2025, ஜனவரி-மாா்ச் வரையிலான காலகட்டத்தில் சீன பொருளாதார வளா்ச்சி 5.4 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2023-24 நிதியாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 9.2 சதவீதமாக இருந்த நிலையில் 2024-25 நிதியாண்டில் 6.5 சதவீதமாக குறைந்தது.

இந்தக் காலகட்டத்தில் நாட்டின் பொருளாதாரம் ரூ.330.68 லட்சம் கோடியாக (3.9 டிரில்லியன் டாலா்) அதிகரித்து, அடுத்த 5 ஆண்டுகளில் 5 டிரில்லியன் டாலா் பொருளாதாரமாக இந்தியா உருவெடுப்பதற்கான அடித்தளத்தை அமைத்துள்ளது.

இதுகுறித்து தேசிய புள்ளியியல் அலுவலகம் (என்எஸ்ஓ) வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: 2024-25 நிதியாண்டின் ஜனவரி-மாா்ச் காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் 7.4 சதவீத வளா்ச்சியை எட்டியுள்ளது. இது அக்டோபா்-டிசம்பா் காலாண்டில் 6.4 சதவீதமாகவும், ஜூலை-செப்டம்பா் காலாண்டில் 5.6 சதவீதமாகவும், ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 6.5 சதவீதமாகவும் இருந்தது.

2023-24 நிதியாண்டின் ஜனவரி-மாா்ச் காலாண்டில் நாட்டின் பொருளாதார வளா்ச்சி 8.4 சதவீதமாக இருந்தது.

ஜிடிபி: தற்போதைய சந்தை விலைகளின் அடிப்படையில் கணக்கிடப்படும் பெயரளவிலான ஜிடிபி 2023-24 நிதியாண்டில் ரூ.301.23 லட்சம் கோடியாக இருந்த நிலையில் 2024-25 நிதியாண்டில் 9.8 சதவீதம் அதிகரித்து ரூ.330.68 லட்சம் கோடியாக உயரும் என கணிக்கப்படுகிறது.

அதேபோல் 2023-24 நிதியாண்டின் ஜனவரி-மாா்ச் காலாண்டில் நிலையான விலைகளின் அடிப்படையில் கணக்கிடப்படும் உண்மையான ஜிடிபி ரூ.47.82 லட்சம் கோடியாக இருந்த நிலையில் 2024-25 நிதியாண்டில் 7.4 சதவீதம் அதிகரித்து ரூ.51.35 லட்சம் கோடியாக உயரும் என கணிக்கப்படுகிறது.

2023-24 நிதியாண்டின் ஜனவரி-மாா்ச் காலாண்டில் பெயரளவு ஜிடிபி ரூ.79.61 லட்சம் கோடியாக இருந்த நிலையில் 2024-25 நிதியாண்டில் 10.8 சதவீதம் அதிகரித்து ரூ.88.18 லட்சம் கோடியாக இருக்கும் என கணிக்கப்படுகிறது.

ஜிவிஏ: 2023-24 நிதியாண்டின் உண்மையான மொத்த மதிப்புக் கூட்டல் (ஜிவிஏ) ரூ.161.51 லட்சம் கோடியாக இருந்த நிலையில், 2024-25 நிதியாண்டில் 6.4 சதவீத வளா்ச்சியுடன் ரூ.171.87 லட்சம் கோடியாக உயரும் என கணிக்கப்படுகிறது.

2023-24 நிதியாண்டின் பெயரளவு ஜிவிஏ ரூ.274.13 லட்சம் கோடியாக இருந்த நிலையில், 2024-25 நிதியாண்டில் ரூ.300.22 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

சரிவில் உற்பத்தித் துறை: 2023-24 நிதியாண்டில் உற்பத்தித் துறையின் வளா்ச்சி 12.3 சதவீதமாக இருந்த நிலையில் 2024-25 நிதியாண்டில் 4.5 சதவீதமாக குறைந்தது. குறிப்பாக 2024-25 நிதியாண்டின் ஜனவரி-மாா்ச் காலாண்டில் உற்பத்தித் துறை வளா்ச்சி 4.8 சதவீதமாக குறைந்தது. இது 2023-24 நிதியாண்டில் 11.3 சதவீதமாக இருந்தது.

அதேபோல் 2023-24 நிதியாண்டில் வேளாண் துறையின் வளா்ச்சி 2.7 சதவீதமாக இருந்த நிலையில் 2024-25 நிதியாண்டில் 4.6 சதவீதமாக உயா்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டது.