

காங்கிரஸ் கட்சி, பிகாரி பேரவைத் தேர்தலில் பின்னடைவிலும் தெலங்கானா ஜூப்லி ஹில்ஸ் தொகுதி இடைத்தேர்தலில் முன்னிலையும் உள்ளது.
பிகாரில் பேரவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கையும், தெலங்கானாவில் ஜூப்லி ஹில்ஸ் தொகுதியின் இடைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கையும் இன்று எண்ணப்பட்டு வருகிறது.
பிகார் பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் தற்போதைய நிலவரப்படி, 243 தொகுதிகளில் 86 தொகுதிகளில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது; 6 தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது.
இதனிடையே, தெலங்கானாவின் ஜூப்லி ஹில்ஸ் தொகுதியின் இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கையின் தற்போதைய நிலவரப்படி, காங்கிரஸின் நவீன் யாதவ் 50,800-க்கும் மேற்பட்ட வாக்குகளுடன் முன்னிலையில் (12,800) உள்ளார். அதே வேளையில், பாஜக தற்போதைய நிலவரப்படி சுமார் 8,500 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளன.
இதையும் படிக்க: பிகாரின் நீண்ட கால முதல்வர் நிதீஷ் குமார்! ஆனால், 20 ஆண்டுகளாக தேர்தலில் போட்டியிடாதது ஏன்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.